ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இலுப்பை சாராயம் குடித்து மட்டையான காட்டு யானைகள்! ஒடிஷாவில் சுவாரஸ்ய சம்பவம்!

இலுப்பை சாராயம் குடித்து மட்டையான காட்டு யானைகள்! ஒடிஷாவில் சுவாரஸ்ய சம்பவம்!

யானைகள்

யானைகள்

கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வந்து பெரிய மேளங்கள் அடித்து சத்தம் எழுப்பினர். அதன் பின்னர் யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் ஓடின.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Odisha (Orissa), India

  ஒடிஷா மாநிலத்தில் இலுப்பை பூ சாராயம் குடித்து யானைக் கூட்டம் ஒன்று போதையில் படுத்து உறங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தியத்தை ஏற்படுத்தியது.

  இந்தியாவில் உள்ள பல்வேறு பழங்குடி இனக்குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டது.

  கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி அதில் இலுப்பை பூவை போட்டு ஊறவைத்துள்ளனர். அதில் இருந்து மக்குவா என்ற நாட்டு சாராயம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

  மறுநாள் வந்து பார்த்த போது பானைகள் எல்லாம் உடைந்து கிடந்துள்ளது. மேலும் அதன் அருகில் 24 யானைகள் தூங்கிக் கொண்டிருந்தன. கிராம மக்கள் யானைகளை எழுப்ப முயற்சித்தும் யானைகள் புறண்டு கூட படுக்கவில்லை.

  நீ நல்லா இருப்பா... கலெக்டரை ஆசிர்வதித்த வயதான பெண் - வைரலாகும் வீடியோ (news18.com)

  இதனையடுத்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வந்து பெரிய மேளங்கள் அடித்து சத்தம் எழுப்பினர். அதன் பின்னர் யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் ஓடின.

  இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, சாராயம் குடித்து தான் யானைகள் மட்டையாகின என கூற முடியாது சதாரணமாக கூட தூங்கியிருக்கலாம் என்கின்றனர். ஆனால் சாராய பானைகள் உடைந்திருப்பதை கண்ட ஊர் மக்கள், யானை நிச்சயம் சாராயம் குடித்து தான் உறங்கியதாக அடித்து சொல்கின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Elephant, Odisha