Home » News » Trend

குடிபோதையில் ஒன்றரை கி.மீ தூரத்துக்கு ரயில்வே டிராக்கில் கார் ஓட்டிச் சென்ற பெண் -வைரலாகும் சி.சி.டி.வி வீடியோ

ஸ்பெயினில் குடிபோதையில் ரயில்வே டிராக்கில் வண்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடிபோதையில் ஒன்றரை கி.மீ தூரத்துக்கு ரயில்வே டிராக்கில் கார் ஓட்டிச் சென்ற பெண் -வைரலாகும் சி.சி.டி.வி வீடியோ
ரயில்வே டிராக்கில் செல்லும் கார்
  • Share this:
ஸ்பெயினின் மாலாகா பகுதியில், குடிபோதையில் பெண் ஒருவர், தனது காரை ஒன்றரை கி.மீ தூரத்திற்கு ரயில் தடங்களில் ஒட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான இக்காட்சிகள் ஆன்லைனில் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் கார் ஒன்று மாட்டியிருபதை மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த காரை மீட்டனர். பின்னர், காரில் பார்க்கும் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்திருப்பது தெரியவந்தது. அவருடைய ரத்தத்தில் அனுமதிக்கப்படும் ஆல்கஹால் அளவைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.



அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது குடித்துவிட்டு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருடைய கார் சுரங்கப்பாதையில் சிக்கியதன் காரணமாக ரயில் சேவை இரண்டு மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டது.
First published: November 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading