செங்காந்தள் நிறத்தில் வெடித்துச் சிதறும் எரிமலை... இணையத்தில் வைரலாகும் வீடியோ

செங்காந்தள் நிறத்தில் வெடித்துச் சிதறும் எரிமலை... இணையத்தில் வைரலாகும் வீடியோ

எரிமலை

நெருப்புக்குழம்பை எரிமலை வெளியேற்றி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் எரிமலை இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஐஸ்லாந்து நாட்டின் ரீக்ஜாவிக் நகரில் எரிமலை நெருப்புக்குழம்பை வெளியேற்றி வருகின்றது. இதனால் அப்பகுதி முழுமையும் வெப்பம் மிகுந்து காணப்படுகின்றது. எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு செங்காந்தள் நிறத்தில் வெடித்து சிதறி குளம் போல் ஓடிக்கொண்டு உள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

  எரிமலை நெருப்புக்குழம்பை வெளியேற்றி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள Geldingadalur எரிமலை கடந்த சில நாட்களாக சீற்றத்துடன் உள்ளது. நெருப்புக்குழம்பை எரிமலை வெளியேற்றி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. எரிமலை இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   

   

      

  இந்த வீடியோவை வான்வழி புகைப்படக் கலைஞர் ஜார்ன் ஸ்டெய்ன்பெக் ட்ரோன் மூலம் பதிவு செய்துள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  சிறந்த கதைகள்