ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆட்டோ கூரையின் மீது தோட்டம் வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்!

ஆட்டோ கூரையின் மீது தோட்டம் வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்!

ஆட்டோ கூரையின் மீது தோட்டம் வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ கூரையின் மீது தோட்டம் வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோவின் கூரையின் மீது செடிகளை வளர்த்து சிறு தோட்டம் போல் பராமரித்து வரும் ஆட்டோவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அந்த ஓட்டுநரை பாராட்டி இருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வெப்பத்தை குறைப்பதற்கு வீட்டை சுற்றி செடிகள் மற்றும் மரம் வளர்ப்பதை கேள்விப்பட்டிருப்போம். மேலும் வாகன ஓட்டிகள் சிலர் தன்னுடைய வாகனத்தில் ஏசியை பொருத்திக் கொள்வதையும் பார்த்திருப்போம். ஆனால் வெப்பத்தை குறைப்பதற்காக வாகனத்தின் மேற்கூறையின் மீது யாரேனும் தோட்டத்தை வளர்த்து பார்த்து உள்ளீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது.

  டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உணர்த்தும் வகையிலும் வெயில் நேரங்களில் ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காகவும் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார். வெயில் நேரங்களில் வெப்பத்தை குறைப்பதற்காக தனது ஆட்டோவின் கூரையின் மீது செடிகளை வளர்த்து சிறு தோட்டம் போல பராமரித்து வருகிறார். இந்த ஆட்டோவின் புகைப்படம் ட்விட்டர் சமூக வளையத்தில் பதிவேற்றம் செய்தது முதல் பல லைக்குகளையும் ஷேர்களையும் குவித்து வருகிறது. பல்வேறு மக்கள் ஆட்டோ ஓட்டுநரின் இந்த புதிய முயற்சியை பாராட்டி கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு தன்னுடைய ட்விட்டர் வலை பக்கத்தில் இந்த ஆட்டோவின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் மேலும் புகைப்படத்துடன் கீழ்க்கண்ட வாசகங்களையும் இணைத்துள்ளார். அதில் ”இந்தியா கேட்டில் என்னுடைய நண்பர் ஒருவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. மகேந்திர குமார் என பெயருடைய ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய ஆட்டோவின் கூரையின் மீது செடிகளை வளர்த்து வருகிறார். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும் மேலும் தன்னுடைய ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு குளுமையான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இந்த சிறிய தோட்டத்தை வளர்த்து வருகிறார். இது மிகவும் பாராட்டத்தக்க செயல். இந்தியர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்” என்று அந்த புகைப்படத்தின் கீழ் வாசகங்களை இணைத்துள்ளார்.

  Also Read : கால் வலிக்காக ஹாஸ்பிட்டல் போன பெண்ணுக்கு 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்

  சில நாட்களுக்கு முன் பகிரப்பட்ட இந்த பதிவானது 1500 க்கும் மேற்பட்ட லைக்குகளை கடந்து இன்னும் அதிக லைக்குகளை பெற்று வருகிறது. மேலும் இந்த பதிவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரைபாராட்டி வருகின்றனர். அதில் இணையவாசி ஒருவர் ”நான் அவரை என்னுடைய கல்லூரியின் அருகில் பலமுறை பார்த்துள்ளேன். ஒருமுறை அவருடைய ஆட்டோவில் பயணமும் செய்துள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கமே இவரையும், இவரது இந்த அற்புதமான திட்டத்தையும் ஆதரிப்பது ஆகும்” என்று அந்த இணையவாசி பதிவிட்டுள்ளார். “ஆம், இது ஒரு அற்புதமான மற்றும் புதுமையான முயற்சி” என மற்றொரு இணையவாசி பதிவிட்டுள்ளார். “சிபி சாலையில் அடிக்கடி இவரை பார்த்துள்ளேன். இது மிகவும் புத்திசாலிதனமான செயல்” என்று மற்றொரு இணையவாசி பதிவிட்டுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Delhi, Trends, Viral