இளம் பெண்களை கியர் மாற்ற வைத்து விளையாட்டு... வைரல் வீடியோவால் டிரைவரின் லைசன்ஸ் ரத்து...!

இளம் பெண்களை கியர் மாற்ற வைத்து விளையாட்டு... வைரல் வீடியோவால் டிரைவரின் லைசன்ஸ் ரத்து...!
News18
  • News18
  • Last Updated: November 16, 2019, 12:00 PM IST
  • Share this:
வாகனத்தில் முன் பகுதியில் அமர்ந்திருந்த இளம்பெண்களை கியர் மாற்ற அனுமதித்த டிரைவரின், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், டிரைவரின் லைசன்ஸ் 6 மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் கல்பெட்டா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வாகனத்தின் முன்பகுதியில் சில இளம்பெண்கள் அமர்ந்திருக்க, வாகனத்தை ஓட்டிய டிரைவர் அவர்களை கியர் மாற்ற அனுமதிக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இது பற்றி ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
வாகனத்தை பாதுகாப்பாக இயக்கத்தவறியதாக டிரைவர் ஷாஜியின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்து ஆர்.டி.ஓ நடவடிக்கை மேற்கொண்டார்.

Also See...

 
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்