கொரோனாவை விரட்ட 90 மில்லி ரம், 2 ஹாஃப் பாயில் போதும் - வைரலான கர்நாடக காங்கிரஸ் கவுன்சிலரின் வீடியோ

கொரோனாவை விரட்ட 90 மில்லி ரம், 2 ஹாஃப் பாயில் போதும் என கர்நாடக மாநில காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

கொரோனாவை விரட்ட 90 மில்லி ரம், 2 ஹாஃப் பாயில் போதும் - வைரலான கர்நாடக காங்கிரஸ் கவுன்சிலரின் வீடியோ
கர்நாடக காங்கிரஸ் கவுன்சிலர்
  • Share this:
கொரோனா உங்களை அண்டாமல் இருக்க ரம்மும், Half boil-ம் சாப்பிடுங்கள் என கர்நாடக காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கர்நாடாகா மாநிலம் மங்களூரு மாவட்டத்திற்குட்பட்ட உல்லால் பகுதி கவுன்சிலரான ரவிச்சந்திர காட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனாவில் இருந்து மீள பல்வேறு மருந்துகளை தாம் முயற்சித்ததாகக் கூறியுள்ளார். 90 மில்லி ரம்மும் 2 Half boil முட்டைகளுமே அதற்கு தீர்வு தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கவுன்சிலரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அக்கட்சியின் மேலிடம் தெரிவித்துள்ளது.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading