Home » News » Trend

16 மணி நேரம் மரத்தின் மீது சிக்கித் தவித்த இளைஞர்: உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இந்திய விமானப் படை - வைரல் வீடியோ

சத்திஸ்கர் மாநிலத்தில் கடும் மழையால் அணையில் அதிகரித்த தண்ணீரில் சிக்கி 16 மணி நேரம் மரத்தைப் பிடித்து உயிரைக் காத்துக்கொண்டிருந்தவரை இந்திய விமானப் படையினர் உயிரைப் பணயம் வைத்து மீட்டனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

16 மணி நேரம் மரத்தின் மீது சிக்கித் தவித்த இளைஞர்: உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இந்திய விமானப் படை - வைரல் வீடியோ
மீட்புப் பணியில் இந்திய விமானப் படை
  • Share this:
சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்புர் மாவட்டத்திலுள்ளது குடாகட் அணை. அந்தப் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலாத் தளமாக அந்த அணைஇருந்துவருகிறது. நேற்று, அந்த அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அப்போது, அணையிலிருந்த கற்பாறைக்கு ஜித்தேந்திர காஷ்யப் சென்றுள்ளார்.

கடுமையான மழையின் காரணமாக தண்ணீர் வேகமாக கொட்டியதால் அவர் அந்தப் பாறையிலேயே மாட்டிக் கொண்டார். அவரால் அங்கிருந்து வரமுடியவில்லை. மரக்கிளையை பிடித்துக் கொண்டு அங்கேயே 16 மணி நேரம் இருந்தார்.

 




பின்னர், இந்திய விமானப் படையினர் தங்கள் உயிரைப் பணயம்வைத்து கயிறைக் கட்டி இறங்கி அவரை மீட்டனர். தண்ணீரால் சூழப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டவரை மீட்ட இந்திய விமானப் படைக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அவரை, இந்திய விமானப் படை மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading