கண்களால் பார்த்தாலும் நம்ப முடியாத அளவுக்கு பல விநோதமான அதிசயங்களை தன்னுள் அடக்கியுள்ளது தான் இயற்கை. தற்போதெல்லாம் இயற்கையின் திகைப்பூட்டும் படங்களை நாம் சமூக தளங்களில் பார்க்கமுடிகிறது. ஆனால், அதையெல்லாம் ஒருமுறையாவது நாம் நிச்சயமாக போலி என்றே நினைக்கும் அளவிற்கு இயற்கையின் அதிசயங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மரத்தை பற்றித்தான் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்போகிறோம்.
ஆம் நாம் இங்கு காணப்போகும் மரமானது பரவலாக ஏமனில் காணப்படுகிறது, இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், மரத்தை வெட்டினால் அதிலிருந்து மனித இரத்தம் போன்ற அடர்த்தியான மற்றும் சிவப்பு நிற திரவம் வெளியேறுவது தான். அந்த சிவப்பு திரவத்தை பார்க்கும்போது தன்னை வெட்டுவதால் தான் அந்த மரமானது ரத்தக் கண்ணீர் வடிக்கிறதோ என்றே நமக்கு தோன்றக்கூடும்.
இந்த மரமானது இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக மரங்களை வெட்டும்போது அதிலிருந்து வெண்மையான வண்டல் போன்ற ஒட்டும் பொருள் தான் வெளிவரும், ஆனால் இந்த மரத்தை வெட்டும்போது ரத்தம் போன்ற சிவப்பு திரவம் வெளிவரும். மேலும், இந்த மரமும் சாதாரண மரங்களைப் போல வளராமல் மாறாக சற்று தலைகீழாக வளருவதும் ஓர் அதிசயம் தான்.
டிராகன் இரத்த மரம் (Socotra dragon tree or Dragon Blood Tree):
'டிராகன் இரத்த மரம்' (Dragon Blood Tree) என்று அழைக்கப்படும் இம்மரம் இயற்கையின் தனித்துவமான மரம் ஆகும். சகோட்டா தீவுகளில் காணப்படும் இந்த மரங்கள் மற்ற தாவரங்களைப் போல தண்ணீரை விரும்புவதில்லை. மாறாக இது அதிகமான வெப்பநிலையில் மிகவும் வசதியாக வளரும் தன்மை கொண்டது ஆகும். இதன் நீளம் 33 முதல் 39 அடி வரை இருக்கும். மேலும் இதன் ஆயுள் 650 ஆண்டுகள் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
Also Read : வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை..
கீழே இருந்து முற்றிலும் தட்டையாக வளரும் இந்த மரங்களின் கிளைகள் மேலே செல்ல செல்ல தடிமனாக வளரும். இதன் இலைகள் குடை போல் உயர்ந்து மிகவும் அடர்த்தியாக இருக்கும். இது தவிர, இந்த மரத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் இதிலிருந்து வெளிவரும் சிவப்பு நிற பிசின் போன்ற திரவம் தான். இந்த மரத்தின் பட்டையை வெட்டியவுடன் அதில் இருந்து இரத்தம் போன்ற சிவப்பு பிசின் வெளிவருவதால் இது 'இரத்த மரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
Also Read : தினமும் 2 கி.மி நடந்து சென்று உரிமையாளருக்கு உணவு கொண்டு சேர்க்கும் நாய் - வைரல் வீடியோ
மக்களின் நம்பிக்கை:
ஏமன் மக்கள் மத்தியில் இந்த மரத்தைப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உலா வருகின்றன. மரத்தில் இருந்து வெளிப்படும் இரத்தம் போன்ற பிசினானது மிகவும் சக்திவாய்ந்ததாக மக்களால் கருதப்படுகின்றது, மேலும் இது காய்ச்சல் முதல் அல்சர் வரை அனைத்திற்கும் மருந்தாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த மமரமானது முக்வா, முனிங்கா மற்றும் இரத்த மரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் மருத்துவ குணங்கள் காரணமாக மக்கள் இதை ஒரு மந்திர மரமாகவும் கருதுகின்றனர். இந்த மரத்திலிருந்து வரும் திரவத்தின் நிறமானது மிகவும் உறுதியானதாக இருக்குமாம். மேலும் இந்த நிறமானது பொருட்களை வரைவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nature plant, Oman, Trending