ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஸ்கூல் பெல்ட் மாதிரி இருக்கு - ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா!

ஸ்கூல் பெல்ட் மாதிரி இருக்கு - ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா!

ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா

ரூ.35,000க்கு மகள் வாங்கிய பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா

சிகப்பு , பச்சை வண்ணங்களில் இருக்கும் அந்தப் பெல்ட்டில் குசி பிராண்டின் லோகோ இடம் பெற்றிருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்திய மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். பெரும்பாலானோர் மாத சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் பட்ஜெட் போட்டே வாழ்க்கை நடத்துவார்கள். எது தேவை என்பதைவிட எது தேவையில்லையென பார்த்து பார்த்து செலவு செய்வார்கள். விலை அதிகம் என்பதால் ஐ போன்களை விட ஆண்ட்ராய்டு போன்களே அவர்களது சாய்ஸாக இருக்கும்.

ஒரு பொருளை வாங்கும்போது நான்கு இடங்களில் விசாரித்து, அதன் தரம் மற்றும் எங்கே விலை குறைவாக இருக்கிறது என பல கடைகள் ஏறி இறங்கி தான் பொருட்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் வாங்கும் பொருட்கள், வேறு கடையில் விலை குறைவு என யாராவது சொல்லி விட்டால் போதும், ஒரு வாரத்துக்கு தூக்கம் வராது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிலைமை இப்படி இருக்க, ரூ.35,000க்கு மகள் பெல்ட் வாங்க, தாய் ஒருவர் கதறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரைச் சேர்ந்த சபி குப்தா என்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனிதா என்பவர் தனது மகள் சபி, புதிதாக வாங்கிய பெல்ட்டின் விலையைக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறார். குசி(Gucci) என்ற பிராண்ட்டை சேர்ந்த அந்த பெல்ட்டின் விலை ரூ.35,000.

அனிதா தனது மகள் புதிதாக வாங்கிய பெல்ட்டை பார்த்திருக்கிறார். அதன் அருகில் பெல்ட்டின் பாக்ஸ் இருந்திருக்கிறது. அந்த பாக்ஸில் குறிப்பிட்டுள்ள விலையைப் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார். இதனையடுத்து அவர், ''இது டெல்லியில் உள்ள டிபிஎஸ் ஸ்கூல் பெல்ட் போல இருக்கிறது. இதனை போய் எதற்காக அவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய்?'' என அவரது மகளை வறுத்தெடுக்கிறார்.

Also read... மூக்கின் மூலம் செல்போன் இயக்கி, டிக் டாக்கில் டான்ஸ் வீடியோ பதிவிட்ட நாய் - வைரல் வீடியோ!

சிகப்பு , பச்சை வண்ணங்களில் இருக்கும் அந்தப் பெல்ட்டில் குசி பிராண்டின் லோகோ இடம் பெற்றிருக்கிறது. பெல்ட்டின் வண்ணம் டிஎஸ்பி ஸ்கூல் பெல்ட்டை நியாபகப்படுத்துவது போலிருக்க, இதனைப் போய் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறாயே என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். இந்தப் பெல்ட்டை ரூ.150க்கு வாங்கலாமென அவர் திட்டிக்கொண்டிருக்க, அவரது மகள் சபி பின்னாடியிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. பலரும் அனிதாவின் கருத்து, தங்கள் அம்மாவை நியாபகப்படுத்துவதாக உள்ளது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் குசி, டியோர், பிராடா உள்ளிட்ட பிராண்ட்கள் மிகப் பிரபலம். பெயருக்கேற்ப அதன் விலையும் அதிகம். இந்தப் பிராண்ட்களின் பொருட்களைப் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் தான் வாங்குவார்கள். மேற்சொன்ன பிராண்ட்களில் சாதாரண பொருட்களின் விலையே மிக அதிகம் என்பதால் எப்பொழுதும் மக்களிடையே பேசு பொருளாக இருக்கும். நடுத்தர வர்க்க குடும்பங்களில் இந்தப் பொருட்களை யாராவது வாங்கி விட்டால் கலவரமே வெடிக்கும். அதனால் தான் இந்த வீடியோவைப் பலராலும் தங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending