Home /News /trend /

தோசை சுட வரலயா.? இனி ஈஸியா தோசைகளை சுட மெஷின் வந்துவிட்டது - வைரலாகும் வீடியோ.!

தோசை சுட வரலயா.? இனி ஈஸியா தோசைகளை சுட மெஷின் வந்துவிட்டது - வைரலாகும் வீடியோ.!

தோசை மெஷின்

தோசை மெஷின்

Dosa Printer | தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வேலையை எளிதாக்கும் இயந்திரங்களின் வரிசையில் தற்போது தோசைகளை சுடும் இயந்திரமும் (dosa Printer) இடம் பெற்றுள்ளது. தோசைக்குன்னு தனி ருசி இருக்கு. இது மெசினில் நிச்சயம் கிடைக்காது என்கின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமையலில் பெண்களுக்கு மிகவும் சவாலான விஷயம் தோசை சுடுவது தான். ஒன்று தோசை கருகி விடும் அல்லது பிச்சு பிச்சு எடுக்க வேண்டியிருக்கும். இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்றும் தோசை சுடுவதற்கும் ஏதாவது இயந்திரங்கள் வந்தால் நல்லா இருக்கும் என்று நம்மில் பலர் யோசித்திருப்போம். அந்த கனவையெல்லாம் நிறைவேற்றும் விதமாக தற்போது பிரிண்டர் வடிவில் தோசை சுடும் இயந்திரம் வந்துள்ளது.

இன்றைய காலச்சூழல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சமையலில் வேலையை எளிமையாக்கும் விதமாக பல இயந்திரங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. விறகு அடுப்பு கேஸ் அடுப்பாக மாறியது முதல் மாவு மற்றும் சட்னி அரைப்பதற்கு மிக்ஸி, கிரைண்டர், எலக்ட்ரிக் குக்கர், பாத்திரங்களை எளிதில் கழுவுதற்கு டிஷ் வாஷ் என இந்த பொருள்கள் அனைத்தும் சமையல் அறையில் வேலையை விரைவில் முடிக்க உதவுகிறது. இந்த வரிசையில் தற்போது பெண்களின் வேலையை எளிமையாக்க வந்துள்ளது தோசா பிரிண்டர் அதாவது தோசை சுடும் இயந்திரம்.

தோசை சுடும் இயந்திரம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்த வீடியோவை டிவிட்டர் யூசர் ஒருவர் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில்“ ஒரு பெண் பிரிண்டர் போல ஒரு மெசினை எடுக்கிறார். அது தான் தோசை சுடும் இயந்திரம். பின்னர் அந்த மிசினில் ஒரு குவளைப் போன்ற பகுதியில் மாவை ஊற்றுகிறார். தொடர்ந்து எத்தனை நிமிடத்தில் தோசை சுட வேண்டும், எந்த பதத்தில் உங்களுக்கு தோசை வேண்டும்? மொறு மொறுன்னு முறுக்கு தோசையா? அல்லது ஊத்தப்பம் போன்று வேண்டுமா? என நாம் மெசினில் உள்ள பட்டனின் மூலம் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.பின்னர் நீங்கள் சுடும் தோசைக்கு எண்ணெய் அல்லது நெய் என உங்களுக்கு பிடித்தவற்றை ஊற்றி சுடலாம். இந்த செயல்முறைகள் முடிந்த சில நேரங்களிலேயே நீங்கள் விரும்பிய தோசை மெசினிலிருந்து கிடைக்கிறது. தோசை வெளியில் வந்ததும் சட்னி அல்லது சாம்பார், பொடி என பிடித்தவற்றை வைத்து சுவைக்கலாம் என்பதோடு வீடியோ முடிவடைகிறது.

Also Read : ”இது ஆப்பிளா.? இல்லை கேக்கா.? - வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.!

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த டிவிட்டர் யூசர் ஒருவர், இதில் ஊத்தாப்பம் கிடைக்குமா? என பதிவிட்டுள்ளார். மற்றொரு யூசர் ஒருவர் தேவையற்ற தொழில்நுட்பம், தோசை ஒரு தனிச்சுவைக் கொடுக்கும் என்பது தோசை பிரியர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் ஆனியன் தோசை, மசால் தோசை, என பல வெரைட்டி தோசைகளை ருசியாக மெசினில் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தோசை சுடுவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல இதற்கெல்லாம் இது தேவையா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.இன்றைக்கு உள்ள சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அத்தியாவசியமான ஒன்று. அதே சமயத்தில் உடல் உழைப்பு என்பதும் நமக்கு தேவை. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் உடல் உழைப்பை சமையலின் மூலம் தான் வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் ஒவ்வொன்றுக்கும் மெசின்கள் என்றால் என்ன செய்வது? நிச்சயம் பல உடல் நலப்பிரச்சனைளை நாம் சந்திக்க நேரிடும் என்ற கருத்து பரவலாக எழுந்து வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Dosa, Trending, Viral Video

அடுத்த செய்தி