மக்கள் மனதை வென்ற ராமாயணம், மகாபாரதம்: பார்வையாளர்களில் முதலிடம் பிடித்த தூர்தர்ஷன்

முதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

மக்கள் மனதை வென்ற ராமாயணம், மகாபாரதம்: பார்வையாளர்களில் முதலிடம் பிடித்த தூர்தர்ஷன்
ராமாயணம்
  • Share this:
இந்தியாவில் கடந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்ஷன் வந்துள்ளது பார்க்(BARC) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அதனையடுத்து, தூர்தர்ஷன் சேனலில், ராமாயண், மகாபாரதம் ஆகிய தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்தனர். மார்ச் 21- மார்ச் 27-ம் தேதி வரையிலான வாரத்தில் ராமாயணத்துக்கு 1.2 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில், அடுத்த வாரம் மார்ச் 28-ம் தேதி தொடங்கிய வாரத்தில் அதன்பார்வையாளர்கள் 545.8 மில்லியனாக தாறுமாறாக அதிகரித்துள்ளது என்று பார்க்(BARC) என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, மகாபாரதமும், 0.4 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 145.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. அதேபோல, சக்திமான், ஸ்ரீமன் ஸ்ரீமதி, ஷாருக்கானின் சர்க்கஸ் போன்ற பழைய தொடர்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். ஷாருக்கான் நடித்திருக்கும் சர்க்கஸ் 0.2 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 0.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் 580 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது, 39,000 சதவீத வளர்ச்சியாகும்.


Also see:
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading