ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டாதீர்கள் - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டெல்லி போலிஸ்

மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டாதீர்கள் - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டெல்லி போலிஸ்

போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

நடந்து செல்பவர்களே மொபைல் ஃபோன் பயன்படுத்தினால் ஆபத்தில் சிக்கும்போது, வாகனம் ஓட்டுபவர்கள் எப்படி பாதுகாப்பாக செல்ல முடியும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தலைக்கவசம் அணியாமல்  வானகத்தில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற சாலை பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றாக மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டும் பழக்கம் மாறியுள்ளது. குறிப்பாக ஃபோன் பேசியபடி செல்வதைக் காட்டிலும், மெசேஜ் செய்தபடி பயணிப்பது மற்றும் வீடியோ கால் பேசியபடி பயணிப்பது தான் மிக, மிக ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

  கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, போக்குவரத்து சிக்னல்களில் நிற்காமல் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும், மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

  சாலைப் போக்குவரத்து விதிகளின்படி, மொபைல் ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே சமயம், வெறுமனே சட்டங்களும், அபராதங்களும் மக்களின் மனநிலையை முழுமையாக மாற்றி விடாது என்ற சூழலில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது.

  Read More : அடிதடி... பறந்த சூட்கேஸ்.. விமான நிலையத்தில் ரகளை செய்த பெண்.!

  குறிப்பாக, மக்களுக்கு புரியும் மொழிநடையில் விழிப்புணர்வு வீடியோ இருந்தால் அதிக ரீச் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ள டெல்லி காவல் துறை அண்மையில் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி நடந்து சென்று சின்னஞ்சிறு ஆபத்துகளில் சிக்குபவர்களின் காட்சிகள் அடங்கியுள்ளன.

  நடந்து செல்பவர்களே மொபைல் ஃபோன் பயன்படுத்தினால் ஆபத்தில் சிக்கும்போது, வாகனம் ஓட்டுபவர்கள் எப்படி பாதுகாப்பாக செல்ல முடியும் என்று காவல் துறை கேள்வி எழுப்பியுள்ளது. மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி கார் ஓட்டிச் செல்லும் பெண் ஒருவர் திடீரென்று ஆபத்தில் சிக்கும் காட்சியும் இதில் பதிவாகியுள்ளது.

  மோட்டார் வாகன விதிகளின்படி மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே சமயம், நீங்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது, பிற பயணிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தால் உங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

  காவல் துறை வெளியிட்ட வீடியோவை சமூக வலைதள பயனாளர்கள் அவர்களது பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். யாரோ சிலர் செய்யும் தவறுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சூழலில், இதுபோன்ற நபர்களுக்கு மிக அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Delhi, Mobile phone, Traffic Rules