நேற்று #GoBackModi இன்று #DontGoBackModi

நேற்று  #GoBackModi இன்று #DontGoBackModi
  • News18
  • Last Updated: October 12, 2019, 1:57 PM IST
  • Share this:
தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் மோடியை திரும்பிப்போ என்ற வாசகத்தை பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்டாவது வாடிக்கை யாகிவிட்டது.

அதன்படி நேற்றும் #GoBackModi ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் இன்று #DontGoBackModi என்று ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையில் இருந்தார். இது பலரையும் கவர்ந்தது. அதே போல், சீன அதிபர் உடனான இரவு உணவு விருந்தில் தமிழர் உணவுகள் இடம்பெற்றிருந்தன.

தொடர்ந்து இன்று சீன அதிபருக்கு தமிழர் பாரம்பரிய பொருட்களைபரிசளித்தது மட்டுமல்லாது, தமிழர் கலைப்பொருட்களையும் விளக்கினார் மோடி.சீன அதிபர் மற்றும் அதிகாரிகள் உடனான சந்திப்பில் தமிழில் பேசி பேச்சைத் தொடங்கினார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading