இன்றைய காலத்தில் திருமண நிகழ்வுகளில் வித விதமான சம்பவங்கள் நிகழ்ந்து இணையத்தில் டிரெண்டாவது வாடிக்கையாக உள்ளது. அப்படித்தான், குஜாரத் மாநிலத்தில் ஒரு திருமணத்தின் அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஹதாலா என்ற பகுதியைச் சேர்ந்த மன்சுக் சீதாபரா என்பவர் தனது மகள் பிரியாவுக்கு கல்பேஷ் என்ற நபருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளார். சமீபத்தில் இந்த கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பலர் குடித்துவிட்டு வந்ததில் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டு, விழாவில் அமளி ஏற்பட்டுள்ளது. இந்த அனுபவத்தை தொடர்ந்து தனது மகளின் திருமணத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் மன்சுக்.தனது மகளின் திருமண அழைப்பிதழில் "மது குடித்தவர்கள் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம்" என்று தெளிவாக அச்சடித்து விநியோகித்துள்ளார்.
வித்தியாசமான செய்தியுடன் தரப்பட்ட அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழ் யோசனைக்கு பலரும் பாராட்டி வரும் நிலையில், ஒரு தரப்பினரோ தங்கள் சமூகத்தை மோசமானவர்களாக சித்தரிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள மன்சுக்கின் சகோதரர் புபட் சீதாபரா, "நாங்கள் எந்த சமூகத்தையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் இப்படி செய்யவில்லை. திருமணத்தில் எந்த சண்டையும் வராமல் நல்ல விதமாக இருக்க வேண்டும் எண்ணத்தில் தான் இவ்வாறு அழைப்பிதழில் குறிப்பிட்டோம். மகிழ்ச்சியான நினைவுகளை கொண்டதாகவே திருமண நிகழ்வு இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drunk, Gujarat, Marriage, Viral News