Viral video : 'வளர்த்த பெண்ணை கண்டதும் கத்தி பாசத்தை பொழிந்த கழுதை' கண்ணீருடன் கட்டி அனைத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

பாசத்தை பொழிந்த கழுதை

வளர்த்த கழுதையை பிரிந்திருந்த சிறுமி ஒருவர் பண்ணையில் வந்து அதனை கண்டதும் அங்கு நடந்த பாசப்போராட்டம் இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகின்றது.

  • Share this:
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். என்பது உண்மையே! இதனை நிரூபிக்கும் விதமாக ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

    கழுதை ஒன்று ஒரு சிறுமியைத் தழுவிய வீடியோ ஒன்று ட்விட்டரில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வந்தது. இதனைப் பார்த்த இணையவாசிகள் உணர்ச்சி வசப்பட்டு கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்

    Also read | கொரோனா சிகிச்சை மையத்தில் கைகளால் அடைப்பு எடுத்து கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

    ட்விட்டர்வாசி ஒருவர் இந்த கழுதை அதை வளர்த்த பெண்ணுடன் மீண்டும் இணைகிறது என்ற தலைப்போடு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தான் வளர்த்த கழுதை ஒன்றை பண்ணையில் பார்க்க வந்த சிறுமி மனம் உடைந்து இரு கைகளையும் நீட்டி கழுதையை அணைக்க அழைக்கிறாள். இதனை பார்த்த கழுதை கத்தி கொண்டே அன்பை வெளிப்படுத்தியவாறு சிறுமியை கட்டி அனைத்து பாச மழையை பொழிகின்றது.

     

     



     

     



     

     



     

    இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், சுமார் 27,000 ரீட்வீட்களையும் சேகரித்ததால் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. “விலங்குகளுக்கு உணர்ச்சிகள் இல்லை, நேசிக்க முடியாது, நாம் செய்வது போலவே வலியை உணர வேண்டாம் என்று மக்கள் எப்படி சொல்ல முடியும். என்ன ஒரு அழகான வீடியோ, என கமெண்டில் ஒருவர் கூறியுள்ளார்.

    Also read | "அட இது என் நிழலா?" தன் நிழலை பார்த்து வியந்த ஒட்டக குட்டி - வைரலாகும் வீடியோ

     

     



     

     



     

     



     

     

    மற்றும் ஒருவர், மனிதர்கள் எல்லா விலங்குகளையும் இந்த சிறுமியைப் போலவே அதிக அன்போடும் தயவோடும் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    Also read |  தண்ணீருக்கு தவித்த கழுகிற்கு தாகம் போக்கிய வழிபோக்கர்கள் - வைரல் வீடியோ!

     

     



     

     



     

     



     

     



     

     



    இவ்விதம் இணையத்தில் இந்த வீடியோ லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் அதிகம் பெற்று வைரலாகி வருகின்றது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: