தன்னை பாகுபலியாக சித்தரித்த வைரல் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!

தன்னை பாகுபலியாக சித்தரித்த வைரல் வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்!
பாகுபலியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
  • Share this:
தன்னை பாகுபலியாக சித்தரித்த வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூலாக லைக் செய்து அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை காலை குஜராத் வரும் ட்ரம் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. விமான நிலையத்திலிருந்து மொதிரா மைதானம் வரை வழிநெடுக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் அவர் பங்கேற்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 25-ம் தேதி காலையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் ட்ரம்பிற்கு, மகாத்மா காந்தி குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


குஜராத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் ட்ரம்ப், அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு குடும்பத்தினருடன் செல்கிறார். தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் மட்டும் செல்வதால், அப்போது பிரதமர் மோடி உடனிருக்க மாட்டார். தாஜ்மகாலை பார்வையிட்டு முடித்த பின், டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா விடுதியில் ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் தங்க உள்ளார்.

இந்த பயணத்தின் போது மதச்சுதந்திரம், மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட குறித்து ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் விவாதிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக இந்திய பயணத்தில் 36 மணி நேரத்தை செலவிட உள்ளார் ட்ரம்ப்.இந்நிலையில் அவரது வருகையைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளார். அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகுபலியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இதை ரசித்த ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வீடியோவை பதிவிட்டு, இந்தியாவில் உள்ள தனது சிறந்த நண்பர்களுடன் இருக்கப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: டிரம்ப்பின் 36 மணி நேர இந்திய டிரிப்!
First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்