முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!

பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Dolphin Attacks Female Coach : இந்த திகிலான வீடியோவில் ஒரு டால்பின் ஒரு பெண் பயிற்சியாளரைத் தாக்குவதையும், வன்முறையான முறையில் அவரை தண்ணீரை விட்டு தூக்கி எறிவதையும் காட்டுகிறது

  • Last Updated :

அமெரிக்காவில் உள்ள மியாமி சீக்வேரியமில் (Miami Seaquarium) ஒரு டால்பின் தனது பயிற்சியாளரை தாக்கியுள்ள சம்பவம் அதை நேரில் பார்த்த பார்வையாளர்களை மட்டுமில்லாமல், குறிப்பிட்ட "தாக்குதல்" வீடியோவை பார்த்த அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் கடலில் நீந்தியவரை சுறா தாக்கியது, கப்பல் ஒன்றை திமிங்கலம் தாக்கியது என்கிற செய்திகளை கேட்பது நமக்கொன்றும் புதிது அல்ல. ஆனால் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகும் திறன் கொண்ட, மனிதர்களை புரிந்துகொள்ளும் சக்திகொண்ட ஒரு பாலூட்டி இனமாக கருதப்படும் டால்பின் ஒருவரை தாக்கியது, அதுவும் தன் பயிற்சியாளரையே தாக்கியது என்கிற செய்தி, பலருக்கும் பல வகையான கேள்விகளை கிளப்பி விடலாம்.

மியாமி சீக்வேரியமில் நிகழ்ந்த இந்த டால்பின் தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது ட்விட்டர் வழியாக பகிரப்பட்டு - ஏன்? எப்படி? எதற்காக? போன்ற - பல வகையான விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.

கடல்சார் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, குறிப்பிட்ட டால்பின் தன் பயிற்சியாளரின் மீது எதிர்பாராமல் மோதி உள்ளது. அது டால்பினை திடுக்குற செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவாகவே வழக்கத்திலிருந்து விலகி பயிற்சியாளரைத் தாக்கி உள்ளது. ஆனால் பயிற்சியாளரை பல முறை தாக்கிய டால்பின் தனது விருப்பத்திற்கு மாறாக செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துடன் விலங்கு உரிமை ஆணையமான பீட்டாவும் ஒற்றுப்போகிறது.

also read : 5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்- எமோஷ்னல் வீடியோ!

குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்த பீட்டா, “இந்த திகிலான வீடியோவில் ஒரு டால்பின் ஒரு பெண் பயிற்சியாளரைத் தாக்குவதையும், வன்முறையான முறையில் அவரை தண்ணீரை விட்டு தூக்கி எறிவதையும் காட்டுகிறது. @MiamiSeaquarium-க்கான நேரம் முடிந்துவிட்டது - இந்த விலங்குகளை கடலோர சரணாலயங்களுக்கு அனுப்ப வேண்டும்!" என்றும் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 23 வினாடிகள் நீளும் இந்த வீடியோவில், மியாமி சீக்வேரியமில் டால்பின்களை கொண்டு நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிகிறது. அந்த நிகழ்ச்சியில் ‘சன்டான்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு டால்பின், அதன் பயிற்சியாளரை திடீரென்று தாக்க தொடங்குகிறது, உடனே அந்த இடமே சலசலப்பாகிறது.

டால்பினின் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாத அந்த பயிற்சியாளர் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள நீச்சல் குளத்தை விட்டு வெளியேறும் நோக்கத்தில் வேகமாக நீத்துகிறார்; குறிப்பிட்ட டால்பின் அவரை மீண்டும் மீண்டும் தாக்குகிறது. ஒரு கட்டத்தில் அவர் குளத்திலிருந்து வெளியேறுகிறார். டால்பின் நடத்திய இந்த முரட்டுத்தனமான தாக்குதலின் திக் திக் நிமிடங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

also read : வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!

top videos

    மியாமி சீக்வேரியமில் நடந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற ஷானன் கார்பெண்டர் என்கிற புகைப்படக் கலைஞர் இந்த திகிலூட்டும் வீடியோவை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. டால்பினின் தாக்குதலில் இருந்து தப்பித்த பயிற்சியாளர் ஆம்புலன்ஸ் வழியாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

    First published:

    Tags: Viral Video