Home /News /trend /

நாய் வளர்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

நாய் வளர்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானவை - ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Pet Dog | நாய்களை மிக அன்பாக வளர்போருக்கு 23 சதவீதம் இருதய நோய்கள் வருவது குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உங்கள் நாயை நீங்கள் திட்டும்போது அது மிகவும் குற்ற உணர்ச்சிக்குள்ளான ஒரு மனநிலையை தனது முகத்தில் பிரதிபலிப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இது வெறுமனே நீங்கள் திட்டுவதால் மட்டும் அல்ல. அண்மையில் நடந்த ஆய்வு முடிவு ஒன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? அல்லது கோபமாக இருக்கிறீர்களா? என்பது உங்கள் நாய்க்கு உங்கள் முகத்தை வைத்தே தெரியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மனிதர்களோடு அதிகம் பிணைப்பு கொண்ட ஒரு உயிரினமான நாய்கள் நம் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியவை என்பது இந்த ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த Corsin a Muller என்ற உயிரியல் ஆய்வாளர் Golden Retriever, Fox Terrier, Collies, German Shepherd போன்ற பதினோரு நாய்களை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

    touchscreen மூலமாக அவர்கள் இந்த ஆய்வின்போது கோபமான, சிரித்த முகத்தை கண்டறிய கற்றுக் கொடுத்தனர். ஆனால் இந்த ஆய்வின்போது குறிப்பிட்ட அந்த நாய்கள் தங்கள் முகத்தை முழுமையாக காட்டவில்லை.

    இதன் மூலம் மனித முகம் குறித்து, அவர்கள் , அதாவது நாய்கள், எந்த விதமான எதிர்ப்பினை ஆற்றுகின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அதன் உரிமையாளர் சிரித்தால் நாய்கள் முழு முகத்தையும் காட்டுகின்றன. ஆனால் , அதே நேரம் உரிமையாளர் கோபமாக இருந்தால் அவை முழு முகத்தை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே நாய்கள் தங்களின் உரிமையாளர்களின் முக உணர்ச்சிகளை குறிப்பாக முக மாற்றங்களை கண்டு கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க, காட்டு விலங்காக இருந்த நாய் வீட்டு விலங்காக மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. நாய் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான விலங்கு. நாட்டு நாய்களாக இருந்தாலும், உயர் ரக வெளிநாட்டு நாய்களாக இருந்தாலும் மனிதனுக்கும் நாய்க்குமான பாசம் மிகவும் வியப்புக்குரியதே. நாய்கள் எப்போதும் மனிதனுக்கு விசுவாசமாகவும், அன்புடனும் இருப்பது நாம் அறிந்ததே.

    Also Read : உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி தூள்... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

    இந்த நேரத்தில் இன்னொரு ஆய்வு முடிவு குறித்து பேசுவது அவசியமாகிறது. நாய்களை வீட்டில் வளர்த்துக்கொண்டு அதனுடன் நேரம் செலவிடாமல் இருப்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

    ஸ்வீடன் நாட்டில் 34 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வில், நாய்களை மிக அன்பாக வளர்போருக்கு 23 சதவீதம் இருதய நோய்கள் வருவது குறைவாக உள்ளது என்றும், நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் 20 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஆராய்ச்சியின்படி, வீட்டில் நாய் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட கால நேரம் நாய்களுடன் பழகுவதால் அவர்களின் மன அழுத்தம், சோர்வு, கோபம், போன்ற மன ரீதியான தொல்லைகள் குறைகின்றன. நாய்களுடன் விளையாடுவது, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்பவர்களின் உடலும் உள்ளமும் மிகவும் சுருசுருப்பாக இருப்பதுடன், அவர்களின் தேவை இல்லாத கலோரிகளும், கெட்ட கொழுப்பும் கரைகிறது. இதனால் உடல் எடை கூடுவது தடைபடுகிறது.

    நாய் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்... சோதனை முயற்சியாகவாவது ஒரு நாய் வளர்க்கலாம்..,
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி