துணிகளை சலவை செய்ய, ரேக்கில் அடுக்கி வைக்க பெண்ணுக்கு உதவிய செல்ல நாய் - வைரலாகும் வீடியோ!

'துணிகளை அடுக்கி வைக்க உதவிய செல்ல நாய்' -

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படும் முக்கிய செல்ல பிராணியாக இருக்கின்றன நாய்கள்

  • Share this:
சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாக்களில் தனது எஜமானி யோகா செய்வதை பார்த்து அப்படியே செய்த செல்ல நாய் அடங்கிய வீடியோ ஒன்று வைரலானது நினைவிருக்கிறதா.? தற்போது அதே பெண்மணி மற்றும் நாய் இருவர் அடங்கிய மற்றொரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் மீண்டும் வைரலாகி உள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படும் முக்கிய செல்ல பிராணியாக இருக்கின்றன நாய்கள். வெளிநாடுகளில் கிட்டத்தட்ட மற்றொரு குடும்ப உறுப்பினரை போலவே பாவிக்கப்படும் நாய்கள், மனிதர்களுக்கு இணையான சகல வசதிகளுடன் வளர்க்கப்படும்.

வீட்டு பாதுகாப்பில் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் மனிதர்களின் உற்ற நண்பனாக இருப்பதாய் நாய்கள் நிரூபித்துள்ளன. சமீபத்தில் கூட அருகே பெரியவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மடிப்படிகளில் என்ற முயன்ற குறுநடை போடும் சிறு குழந்தை ஒன்றை படிகளில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நாயின் செயல் வீடியோவாக வெளிவந்து வைரலானது நினைவிருக்கலாம்.

ALSO READ | 'அண்ணாமலை முதல் ஆலியா பட் வரை...தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

மனிதர்களை விட கிட்டத்தட்ட 100 மில்லியன் மடங்கு குறைவான அளவுகளில் வாசனைகளை வேறுபடுத்தும் திறன் இவற்றிற்கு உண்டு. இந்த செல்லப்பிராணிகள் மனிதர்களை விட அதிக சக்தி கொண்ட செவிப்புலன் உடையவை.

 

  
View this post on Instagram

 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)


 

இந்நிலையில் Mary & Secret என்ற இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் மேரி என்ற பெண்ணும் அவரது செல்ல பிராணியான சீக்ரெட் என்ற பெயருடைய ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் ரக நாயும் இணைந்து துணிகளை சலவை செய்யும் பணியில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

 

  
View this post on Instagram

 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)


 

மேரியின் செல்ல பிராணியான சீக்ரெட் தனது மனித நண்பருக்கு சலவை செய்வதில் உதவுவதை அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. இது தொடர்பாக மேரி ஷேர் செய்துள்ள வீடியோவில் மேரியும் நாயும் சேர்ந்து சலவை செய்வதை காணலாம்.

 

  
View this post on Instagram

 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)


 

இருவரும் தனித்தனி லாண்டரி மெஷின்களின் முன் நிற்கின்றனர். நாய் வாஷ் செய்யப்பட்ட துணிகளை கூடையில் எடுத்து போடுகிறது. மெஷினில் துணிகளை போட்டு விட்டு டோரை மூடும் மேரியை பார்த்து நாயும் தன் பக்கம் இருக்கும் மெஷினின் டோரை அழகாக மூடுகிறது.

 

  
View this post on Instagram

 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)


 

 

பின்னர் மேரி தன் வலது கையை நீட்ட, நாய் உற்சாகமாக மேலெழும்பி தன் முன்னங்காலால் சீயர்ஸ் செய்கிறது. பின்னர் துவைத்த துணிகளை தனித்தனி ரேக்குகளில் அடுக்கி வைப்பதற்கும் மிக அழகாக மேரிக்கு உதவுகிறது அவரது செல்ல பிராணி.

ALSO READ |  'ட்ரெண்டாகும் 4கோடிவீடு...அனைத்திற்கும் அணில்தான் காரணம்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள மேரி, "இன்று காலை நாங்கள் ஒன்றாக சலவை செய்யும் வேலையில் ஈடுபட்டோம். இது ஆச்சரியமாக இருந்தது, நீங்கள் ஒரு நண்பருடன் எதை செய்தாலும் அந்த செயல் மிக வேடிக்கையாக இருக்கும்" என்று கேப்ஷனிட்டுள்ளார்.

 

  
View this post on Instagram

 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)


 

9 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸை கொண்டுள்ள Mary & Secret இன்ஸ்டா பேஜில் மேரியால் ஷேர் செய்யயப்பட்ட இந்த வீடியோ இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. பல யூஸர்கள் சீக்ரெட்டின் ஆக்டிவ் மற்றும் உதவும் தன்மையை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: