அடுத்த வீட்டில் என்ன நடக்கின்றது என எட்டி பார்க்காவிட்டால் சிலருக்கு பொழுதே விடியாது என பேச்சு வழக்கில் கூறுவார்கள்.
பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதே சிலருக்கு தனி சுகம். பொழுது போக வேண்டும் என்பதற்காக அடுத்தவர் என்ன செய்கிறார், அவர் வீட்டில் நடக்கும் அப்டேட் என்ன என்பதை பக்கத்து வீட்டில் கேட்டாவது தெரிந்து கொள்வர்.
அவ்விதம் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்து தெரிந்து கொள்கின்றது. தென்னை மரத்தில் ஏறி என்று பக்கத்து வீட்டினை பார்க்கும் நாய் இணையத்தில் வட்டமடித்து வருகின்றது.
இந்தியாவின் மிகப்பெரும் பல்துறைத் தொழில் குழுமங்களில் ஒன்றான ஆர்பிஜி குழும சேர்மன் இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'Mind your own business. But when you love your neighbor as yourself......' என்ற கேப்சனையும் ட்வீட் செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.