முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஹெல்மெட் அணிந்து பைக்கில் பயணிக்கும் நாய்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் வைரல் போட்டோ

ஹெல்மெட் அணிந்து பைக்கில் பயணிக்கும் நாய்! விழிப்புணர்வு ஏற்படுத்தும் வைரல் போட்டோ

ஹெல்மெட் அணிந்த நாய்

ஹெல்மெட் அணிந்த நாய்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதம் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டுவருகிறது.

மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமான்சு குப்தா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படம் இணையத்தை கலக்கிவருகிறது.

Also see:

First published:

Tags: Dog, Helmet, Viral