தோளில் காலைப் போட்டு தலைக்கவசம் அணிந்து கூலாக பைக்கில் செல்லும் நாய்! வைரல் வீடியோ

விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தோளில் காலைப் போட்டு தலைக்கவசம் அணிந்து கூலாக பைக்கில் செல்லும் நாய்! வைரல் வீடியோ
ஹெல்மெட் அணிந்த நாய்
  • News18
  • Last Updated: January 9, 2020, 7:34 PM IST
  • Share this:
இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியை பெரும்பாலானோர் பின்பற்றாத நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு தலைக்கவசம் அணிவித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, அதிக பாரங்களை லாரிகளில் ஏற்றி வருவது உள்ளிட்ட மற்ற எந்த விதிமீறல்களிலும் பெரிய அளவில் கவனம் செலுத்த மறுக்கும் போக்குவரத்து போலீசார், தலைக்கவச விஷயத்தில் மட்டும் அவ்வப்போது திடீர் கவனம் செலுத்தி வசூல் வேட்டை நடத்துவதாக பரவலான புகார் உள்ளது.

அந்த வகையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் தனது செல்ல நாயை அமரவைத்து, அதற்கும் ஒரு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
First published: January 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்