Home /News /trend /

அனைத்தையும் இழந்த மனிதருக்கு எது தேவையோ அதனை அளித்த நாய் - வைரலாகும் வீடியோ

அனைத்தையும் இழந்த மனிதருக்கு எது தேவையோ அதனை அளித்த நாய் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : நாய் ஒன்று ஆதரவற்ற நிலையில் இருந்த மனிதருக்கு தனது அன்பினை செலுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    வாழ்வின் அனைத்தையும் இழந்த மனிதருக்கு சிறிய அன்பு எங்கிருந்து கிடைக்கப்பெற்றாலும் அது பேரன்பாய்த் தெரியும். அவ்விதம் தன்னால் இயன்ற அன்பினை நாய் ஒன்று மனிதருக்கு செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ‘Buitengebieden’ என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 7.47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் கிட்டத்தட்ட 48,000 விருப்பங்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது என்று வீடியோவின் தலைப்பில் இந்த நாய் வீடற்ற மனிதனை அணுகுகிறது, அவருக்கு என்ன தேவை என்று அதற்கு தெரிகிறது என பதிவிட்டுள்ளனர்.

    வீடியோவில் நாய் ஒன்று வீடற்ற நிலையில் தெருவில் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துக் கொண்டே உள்ளது. மனிதன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததால் நாய் அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. சில வினாடிகளுக்குப் பிறகு, நாய் மனிதனுக்குத் தேவையான அணைப்பைக் கொடுத்தது. அந்த மனிதன் நாயை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினான்.



    இறுதியில் மனிதரின் மடியில் அமர்ந்து கொண்ட நாய் அமைதியாக உட்கார்ந்து கொண்டது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Trending, Viral Video

    அடுத்த செய்தி