உரிமையாளருக்கு உதவி... 'நல்ல பெண்' என பெயரெடுத்த கியூட் நாய் - வைரல் வீடியோ!

'நல்ல பெண்' என பெயரெடுத்த கியூட் நாய்

மாயா என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மோயிட் என்ற வகையைச் சேர்ந்த பெண் நாய் செய்யும் செயல்கள் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

  • Share this:
சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு மக்கள் சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் குழந்தைகள், செல்லப் பிராணிகளின் கியூட்டான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வைரலாகி, செய்திகளிலும் இடம் பெற்று வருகின்றன.

அப்பட ஒரு நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாயா என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மோயிட் என்ற வகையைச் சேர்ந்த பெண் நாய், விளையாடி முடித்தபிறகு தான் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களை, அதற்கான கூடையில் வைக்கிறது. நாயின் உரிமையாளரைத் தினமும் காலை மிகவும் கனிவான முறையில் எழுப்பி விடுகிறது.

தனக்காக உணவு கேட்பதற்கு பதில் தனது உரிமையாளருக்கு உணவைப் பரிமாற முயற்சிக்கிறது. உரிமையாளர் ஷாப்பிங் முடித்து வந்தால், பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல உதவுகிறது. இப்படி ஏகப்பட்ட நல்ல குணங்களை கொண்டுள்ள இது நல்ல பெண் எனப் பெயரெடுத்துள்ளது.

  
View this post on Instagram

 

A post shared by MAYA THE SAMOYED (@mayapolarbear)


 

இந்த நாயின் செயல்களை வீடியோவாக எடுத்த அதன் உரிமையாளர் அதனை அவரது சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோவாக ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவிற்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ள இன்ஸ்டாகிராம் வாசிகள் நாயின் நற்குணங்கள் மற்றும் அதனை அப்படி வளர்த்த நாயின் உரிமையாளரையும் பாராட்டி வருகின்றனர்.

  
View this post on Instagram

 

A post shared by MAYA THE SAMOYED (@mayapolarbear)


  
View this post on Instagram

 

A post shared by MAYA THE SAMOYED (@mayapolarbear)


 

ஒரு சிலர் நாய் அழகாக இருப்பதாகவும், என்ன ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாயா எனும் அந்த நாய் லேப்டாப் பயன்படுத்துவது, ஷோபாவில் அமர்ந்து ஜாலியாகப் பாப்கார்ன் சாப்பிடுவது , மொபைல் போனில் பேசுவது என அதகளமான செய்கைகள் அதில் இடம் பெற்றுள்ளது.

ALSO READ |  'கேரவனை சுற்றிக் காட்டும் பிக்பாஸ் அனிதா...குழந்தையின் ரகசியத்தை பகிரும் ஹேமா' - இன்றைய ட்ரெண்டிங் வீடியோக்கள்

மாயாபோலார்பியர் (Mayapolarbear) என்ற இணையதளத்துக்கு 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். மேலும் மாயாவிற்கு தனிப்பட்ட முறையில் Mayapolarbear என்ற யூடியூப் சேனலும் உள்ளது. அந்த யூடியூப் பக்கத்தை இதுவரை 1.85 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  
View this post on Instagram

 

A post shared by MAYA THE SAMOYED (@mayapolarbear)


 

அதிலும் நாயின் குறும்புகள் அனைத்தும் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடியோவையும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சில வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

ALSO READ |  பொம்மைக்கு முத்தம் கொடுத்த திமிங்கலம்... வைரல் வீடியோ!

இந்தக் கடினமான சூழலில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களது மன நலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் பிரச்சனைகளை மறந்து, சிரிப்பதற்கான வழியை உருவாக்குகின்றன.

  
View this post on Instagram

 

A post shared by MAYA THE SAMOYED (@mayapolarbear)


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசிப்பதற்கு இவ்வுலகில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பிரச்சனைகள் ஒன்று மாற்றி, ஒன்று வந்து கொண்டே தான் இருக்கும். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கப் பழகுவோம். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
Published by:Sankaravadivoo G
First published: