ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நாக்காலேயே ஓவியம் வரையும் நாய்.. ஆர்டிஸ்ட்டாக மாறிய கோபக்கார பிட்புல்.!

நாக்காலேயே ஓவியம் வரையும் நாய்.. ஆர்டிஸ்ட்டாக மாறிய கோபக்கார பிட்புல்.!

நாக்கிலேயே ஓவியம் வரையும் நாய்

நாக்கிலேயே ஓவியம் வரையும் நாய்

Viral Video | கோபக்கார பிட்புல் நாயை சாதுவாக்கியதோடு மட்டும் அல்லாமல் மிக சிறந்த ஓவியராக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiaamericaamericaamericaamerica

  அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் நாய் ஒன்று நாக்காலேயே ஓவியம் வரைந்து அசத்தி வருகிறது. நாய் ஓவியம் வரையும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  உலகில் உள்ள நாய் வகைகளில் பிட்புல் எனப்படும் வகையை சேர்ந்த நாய் கொஞ்சம் கோபக்கார நாய். வளர்ப்பவர்களை தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட நாயை கூட முறையாக பழக்கினால் நமது நெருக்கமான நண்பனாக்கி கொள்ள முடியும் என நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்த நாய் மீட்பு அமைப்பை சேர்ந்த ஒருவர்.

  அதுவும் கோபக்கார பிட்புல் நாயை சாதுவாக்கியதோடு மட்டும் அல்லாமல் மிக சிறந்த ஓவியராக்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த ஓவியர் நாய் தான் இப்போது உலகில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

  வடக்கு கரோலினாவில் இரண்டு நாய்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது பிட்புல் வகையை சேர்ந்த 7 வயதான நாய் ஒன்று மற்றொரு நாயால் கடித்து குதறப்பட்டது.

  இதையும் படிங்க : வரலாறு காணாத வறட்சி..கென்யாவில் கொத்து கொத்தாக மடியும் காட்டு விலங்குகள்.. 200க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்!

  சண்டையில் தனது இடது காதை இழந்து பலத்த காயத்துடன் கிடந்தது அந்த நாய். அப்போது நாய் மீட்கும் அமைப்பை சேர்ந்த ஜாக்குலின் கார்ட்னர் என்பவர் அந்த நாயை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். அதோடு அந்த நாயை கொஞ்சம் கொஞ்சமாக நட்புடன் நெருங்கிய ஜாக்குலின் அந்த நாயை ஓவியராக மாற்றியிருக்கிறார்.

  கேன்வாஸ் போர்டில் பெயிண்ட்டை ஊற்றிவிட்டு அதன் மேல் பீநட் பட்டர் கலந்த கலவையை ஊற்றுகிறார். பிட்புல் நாய் தனது நாக்கால் அந்த பீநட் பட்டர் கலவையை நக்கி சாப்பிடுகிறது. நாயின் நாக்குபோகும் இடமெல்லாம் பெயிண்ட் கலவை நகர்ந்து வண்ணமயமான ஓவியம் உருவாகிறது.

  இப்படி கண்ணை கவரும் பல வண்ண ஓவியங்கள் அந்த நாயால் உருவாக்கப்பட்டுள்ளது. அசத்தும் வகையில் உருவாகியுள்ள அந்த ஓவியங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார் ஜாக்குலின். அந்த ஓவியங்கள் வைரலாகி வருகின்றன.

  கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் நாயால் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தலா 40 டாலருக்கு விலைபோகியுள்ளன. இப்போது அந்த நாயை பிரபல டச்சு ஓவியர் வான் காக்குடன் பலரும் ஒப்பிட்டு சிலாகித்து வருகிறார்கள். ஏன் என்றால் வான் காக்குக்கும் ஒரு காது இல்லை. அவரை நினைவுப்படுத்தும் விதமாக நாயின் ஓவியங்கள் இருக்கிறது என்பதால் நாயும் பிரபலமாகி வருகிறது.

  இதையும் படிங்க : நான் ஒரு வேற்றுக்கிரக வாசி... தினமும் விமர்சியுங்கள்... ஆனால் 8 டாலர் செலுத்துங்கள்: எலான் மஸ்க்

  அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதை  கொடூரமான பிட்புல் நாயை ஓவியராக்கியுள்ளதன் மூலம் ஜாக்குலின் கார்ட்னர் நிரூபித்துள்ளார். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Trending, Viral Video