டிராஃபிக் போலீசாக மாறிய நாய்... விதிகளை மீறினால் ஒரே கடிதான்...!

டிராஃபிக் போலீசாக மாறிய நாய்... விதிகளை மீறினால் ஒரே கடிதான்...!
டிராஃபிக் போலீசாக மாறிய நாய்
  • News18
  • Last Updated: February 8, 2020, 3:16 PM IST
  • Share this:
ஜார்ஜியாவில் சாலை விதிகளை கடைபிடித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நாய் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்மேற்கு ஜார்ஜியாவில் உள்ளது பத்தூமி நகரம். இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுபடத்த நாய் ஒன்று டிராஃபிக் போலீசாக உருவெடுத்துள்ளது.

சிக்னல் போட்டதும் அதனை மீறும் வாகன ஓட்டிகளை ஓடிச் சென்று குலைத்தும், பொதுமக்கள் சாலையை கடக்கவும் உதவி புரிகின்றது. குழந்தைகள் சாலையை கடப்பதற்கு அவர்களை மறுபுறம் வரை சென்று பத்திரமாக விட்டு வருகின்றது.


கிட்டத்தட்ட டிராஃபிக் போலீசாகவே உருமாறிய இந்த குட்டி நாயின் வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகின்றது. பலரும் நாயின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.



இந்த வீடியோவை ஜார்ஜியா ஊடங்கங்களும் வெளியிட்டு அதன் உரிமையாளரை பாராட்டி வருகின்றனர்.

First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்