ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

நாயின் வீடியோ வைரல்

நாயின் வீடியோ வைரல்

Viral Video | தற்போது நாம் பார்க்கப்போகும் வைரல் வீடியோவில் நாய் ஒன்று கார் இருக்கையில் மனிதனைப் போல தோரணையாக அமர்ந்து செல்வது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிடும். செல்லப்பிராணிகள் வீட்டிற்குள் செய்யும் செல்ல குறும்புகளை எல்லாம் செல்லமாக திட்டுவது முதல் வழக்கமான நடைப்பயணத்திற்கு அவர்களை தன்னுடனே அழைத்து செல்வது வரை உங்களது வாழ்க்கையில் செல்லப்பிராணிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுவிடும். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவர்கள் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது என்றாகிவிடும்.

பல உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை காரில் மகிழ்ச்சியுடன் அழைத்துச் செல்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். மேலும் தங்களது அபிமான தோழர்களுடன் அவ்வாறு காரில் செல்வதை செல்லப்பிராணிகளும் விரும்புவதாகத் தெரிகிறது. நாய் ஒன்று தனது உரிமையாளருடன் கார் சவாரியை ரசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்லப்பிராணிகளை விரும்புபவர்கள் அவர்களை தங்களுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். ஊருக்குள்ளே எங்காவது போனாலும் அல்லது ஊருக்கு வெளியே போனாலும் சரி. காரில் கூட, மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை உட்கார வைத்து, பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பொதுவாக செல்லப்பிராணிகள் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், உரிமையாளர்கள்  செல்லப்பிராணிகளுக்கு பின் இருக்கையில் மெத்தைகளை அடுக்கி  அவை வசதியாக அமர்வதற்கும், உறங்குவதற்கும் எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். ஆனால், வைரல் வீடியோவில் நாய் ஒன்று ஓட்டுநர் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் மனிதனைப் போல தோரணையாக அமர்ந்து செல்வது மிகவும் தனித்துவமாக உள்ளது.

ட்விட்டரில் அடிக்கடி விலங்குகளின் வேடிக்கையான வீடியோக்களைப் பகிரும் @buitengebieden என்ற பக்கத்தில் "What’s up bro?" என்று தலைப்போடு பகிரப்பட்டுள்ள இந்த விடியோ இதுவரை 648.5K பார்வையாளர்களையும், 2401K லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டுவரும் இந்த வீடியோவில் செல்ல நாய் ஒன்று காரின் பயணிகள் முன் இருக்கையில் ஒரு நபரைப் போலவே அமர்ந்து பயணம் செய்கிறது. மேலும் அதன் பஞ்சுபோன்ற உரோமங்கள் நிறைந்த தலையை வெளியே நீட்டி, ஜன்னல் ஓரத்தில் ஒரு பாதத்தை வைத்து ஆர்வமான கண்களுடன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்தது, அனைவரும் செல்ல செல்லப்பிராணியுடன் அதன் உரிமையாளரையும் பிரமிப்புடனும், வேடிக்கையாகவும் பார்த்தனர்.

Also Read : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

அந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த நாயின் செயல் தங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் பல விலங்கு பிரியர்களால் தங்களது உற்சாகத்தை அடக்க முடியவில்லை. எனவே அவர்களும் மற்ற நாய் வீடியோக்கள் மற்றும் படங்களை கமெண்ட்டில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். நெட்டிசன்கள் முகத்தில் சிரிப்பை வரவைத்துள்ள இந்த விடியோவை பார்த்த ஒரு பயனர் "நாய் மற்றொரு பாதத்தில் பீர் கேனைப் பிடித்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று கமெண்ட் செய்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Dog, Tamil News, Trending, Viral Video