'இந்த மழைக்குள்ள எங்களையும் கொஞ்சம் கவனியுங்க' இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த நாய்... காப்பாற்றிய மனிதநேயம்

'இந்த மழைக்குள்ள எங்களையும் கொஞ்சம் கவனியுங்க' இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த நாய்... காப்பாற்றிய மனிதநேயம்

இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் நாய்

நாய் ஒன்று இடுப்பளவு தண்ணீரில் மாட்டிக் கொண்டு எங்கும் செல்ல முடியாமல் தன்னை காப்பாற்ற யாரேனும் வருவாரா? என பரிதவிக்கும் வீடியோ பலரின் கண்களையும் குளமாக்கியுள்ளது.

 • Share this:
  தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. மழையால் வீட்டின் உள்ளே பலரும் முடங்கியுள்ள சூழலில், சாலைகளில் தண்ணீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

  தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. கனமழையால் மனிதர்கள் மட்டும் அல்ல பெரும்பாலும் விலங்குகள் அதிகம் பாதிப்படைகின்றன.

  தெருக்களில் சுற்றித் திரியும், நாய்கள், ஆடுகள், மாடுகள் என விலங்கினங்கள் ஒதுங்க இடம் இல்லாமல் மழை நீரில் தத்தளிக்கும் வீடியோக்களையும் அவற்றை காக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவுகளையும் இணையத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் மெக்ஸிகோவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் நாய் ஒன்று இடுப்பளவு தண்ணீரில் மாட்டிக்கொண்டு பரிதவித்துள்ளது. இதனை கண்ட மீட்பு குழுவினர் நாயை பத்திரமாக மீட்டு படகில் அழைத்துச் சென்றனர்.

   

      

      

      

      

      

     இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மழைக் காலங்களில் பெரும்பாலும் விலங்கினங்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அவற்றிற்கு நாம் தான்மனித நேயத்தோடு உதவ வேண்டும் என பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: