Home /News /trend /

ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த நாய்க்குட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த நாய்க்குட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : நாய்க்குட்டி ஒன்று, ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நாய்க்குட்டி ஒன்று ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாய்க்கு பூனை எதிரி என கூறுபவர்கள் இந்த வீடியோவை கண்ட பின்னர் அவ்விதம் கூற மாட்டார்கள். நாய்க்கு பூனை செய்த நற்செயல் குறித்த வீடியோ இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அழகிய குட்டி நாய் ஒன்று மழையில் தனித்து நின்று கொண்டிருந்த பூனை குட்டியை தன் இருப்பிடத்திற்கு கூட்டி வருகின்றது. தனது உரிமையாளர் வீட்டில் இருக்கையில் வீட்டின் வாசல் படி வரை பூனை குட்டியை வழி நடத்தி வந்து பின்னர் வீட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றது. இந்த வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை 3,894 பேர் லைக் செய்துள்ளனர். 595 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.



    விலங்குகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதை இந்த வீடியோ காட்டுகின்றது. இதே போன்று மற்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் எருமை ஒன்று கீழே விழுந்து கிடந்த ஆமை ஒன்று தலைகீழாக தன்னால் எழ முடியாத நிலையில் இருந்தது. இதனை கண்ட எருமை தனது கொம்புகளை வைத்து ஆமையை நிமிரச் செய்து பின்னர் எழுந்து நின்றது.



    இந்த வீடியோ இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி