நட்புனா என்ன தெரியுமா... மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய் - வைரலாகும் வீடியோ
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு நாய் ஒன்று உதவி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய்
- News18 Tamil
- Last Updated: June 2, 2020, 5:07 PM IST
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாற்று திறனாளி சிறுவன் ஒருவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று அழகாக தள்ளிச் செல்கின்றது. மனிதர்கள் நடமாடும் கூட்டமான பகுதியில் எவ்வித அச்சமுமின்றி மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்யும் நாயின் செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.
நாய்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள நட்பை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துகின்றது , என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

The best time to make friends is before you need them😳 pic.twitter.com/B9zl7pZt9B
— Susanta Nanda IFS (@susantananda3) June 1, 2020