’காதலனைவிட வளர்க்கும் நாய்க்குத்தான் பெண்கள் அதிகமாக முத்தம் கொடுக்கின்றனராம்’

இந்த கருத்துக் கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ’ரிலே’ என்னும் செல்லப்பிராணிகளுக்காக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தியுள்ளது.

news18
Updated: July 23, 2019, 12:46 PM IST
’காதலனைவிட வளர்க்கும் நாய்க்குத்தான் பெண்கள் அதிகமாக முத்தம் கொடுக்கின்றனராம்’
நாய்
news18
Updated: July 23, 2019, 12:46 PM IST
இந்த செய்தி ஆண்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தினாலும் இதுதான் யூனிவர்சல் நடைமுறை என்பது கசப்பான உண்மை.

நாய் நன்றி உள்ளது என்பது போகிற போக்கில் சொன்ன வாக்கியம் கிடையாது. அதன் நன்றியை ஆழமாக உணர்ந்ததால்தான் அப்படி கூற முடியும்.

அதற்கு உதாரணம்தான் சில நாட்கள் முன் தூத்துக்குடியில் உரிமையாளரைக் கொத்த வந்த பாம்பை விரட்டியதில் பாம்பு  கொத்தி  நாய் இறந்தது. இப்போது சொல்லுங்கள்.. நாய்க்கு அதிகம் முத்தம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது..?
இந்த ஆய்வை பிரபல ’ஃபாக்ஸ் நியூஸ்’ தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ’ரிலே’ என்னும் செல்லப்பிராணிகளுக்காக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் பலரும் தன்னுடைய துணையைக் காட்டிலும் அதிகமாக தன்னுடைய செல்லப் பிராணியான நாய்க்குதான் அதிகமாக முத்தம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

Loading...

அதில் 52 சதவீதத்தினர் அடிக்கடி தடவிக்கொண்டே இருப்பார்கள் என்றும், 61 சதவீதம் பேர் வாயில் அதிகம் முத்தம் கொடுப்பதாகவும், 52 சதவீதம் பேர் துணையுடன் உறங்குவதைவிட நாயை தங்களுடன் உறங்க வைத்துக்கொள்வதை விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.இதைவிட ஆச்சரியம் என்னவெனில் 94 சதவீதம் நாய் உரிமையாளர்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதைக் காட்டிலும் நாயுடன் இருப்பதையும், நாயுடன் வெளியே ஊர் சுற்றுவதையும்தான் அதிகமாக விரும்புகின்றனர் என்றுக் கூறியுள்ளனர். இந்தக் கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் பெண்கள்தான் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...