ஆத்தி..சிக்குனா.. சில்லி சிக்கன் தான்.. நாயிடம் இருந்து தப்பிக்க இறந்தார் போல் நடித்த வாத்து - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

நாயிடம் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வாத்து படாத பாடு படும் துயரை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  வாத்து ஒன்று நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக இறந்தார் போல் நடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வனங்களில் நடைபெறும் சுவாரசிய சம்பவங்கள், விலங்குகளின் குறும்புத் தான வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

  இவர் வெளியிடும் வீடியோக்கள் விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் இடையே பெரும் வரவேற்பு பெரும். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள நாயிடம் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வாத்து படாத பாடு படும் துயரை வெளியிட்டுள்ளார். இது குறித்து கேப்ஷன் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

   

      

   

  அதில், விலங்கு ஏமாற்றத்தின் இந்த வடிவம் ஒரு தகவமைப்பு நடத்தை ஆகும், இது டானிக் அசைவற்ற தன்மை அல்லது தானடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார்.

  தனாடோசிஸ் என்பது விலங்கு இறந்துவிட்டதாக "பாசாங்கு செய்வதை குறிக்கின்றது. தனடோசிஸின் நிகழ்வு பாலூட்டிகள் முதல் பூச்சிகள் வரை பல விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது, இது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறை. உதாரணமாக, பூச்சிகள் தானடோசிஸ் நிலையில் இருந்தால் குருவிகள் இறந்தவற்றில் மீது கவனம் செலுத்துவதில்லை. ஒரு குருவி, , தானடோசிஸ் நிலையில் இருந்தால் பூனை அதனை உண்ணாமல் விட்டு விடுகின்றது.

      

  இதற்கு முன்னதாக எலி ஒன்று பூனையிடம் அகப்பட்டுக்கொண்டு உருண்டோடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனம் பெற்று வைரலானது. ஐயோ அம்மா என்ன விட்ருங்கனா என இணையத்தில் வைரலாக பரவிய சிறுவனினின் குரலை பின்னணியாக பதிவு செய்து வெளியிட்டிருந்த வீடியோ பலரின் கவனம் பெற்று இணையத்தில் வைரலானது.
  Published by:Sankaravadivoo G
  First published: