மணப்பெண்ணை 10 கி.மீ துரத்திச்சென்ற வளர்ப்பு நாய்... வைரலாகும் வீடியோ

மணப்பெண்ணை 10 கி.மீ துரத்திச்சென்ற வளர்ப்பு நாய்... வைரலாகும் வீடியோ

மாதிரிப்படம்.

சீனாவில் வளர்ப்பு நாய் ஒன்று, தன்னை வளர்த்த பெண்ணை பிரிய முடியாமல் அவரது திருமணத்தன்று 10 கி.மீ தூரம் கார் பின்னால் ஓடிச்சென்ற நிகழ்வு காண்போரை வியக்கவைக்கிறது.

  • Share this:
நாய் நன்றியுள்ளது என்பார்கள். தன் வீட்டில் நாயை வளர்க்கும் ஒருவருக்குத்தான் தெரியும் அந்த வார்த்தை எவ்வளவு உண்மையானது என்று. வீட்டை காவல் காப்பதில் தொடங்கி, ஆபத்து காலத்தில் தன்னை வளர்ப்பவரை மீட்பது வரை, எந்தவொரு செயலிலும் முழு அர்ப்பணிப்போடு நாய் இருக்கும். இதனால், நாய்க்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவை வார்த்தைகளால்கூட விவரிக்க முடியாது. மனிதர்கள் மீது நாய்கள் காட்டும் அளவு கடந்த அன்புக்குச் சான்றாக நாள்தோறும் பல கதைகளை நாம் கேட்டிருப்போம்.

குறிப்பாக, தன்னை அன்போடு வளர்த்த ஒருவரை நாய் ஒருபோதும் பிரிய விரும்பாது. அப்படி, பிரிய மனமில்லாமல் தன்னை வளர்த்தவர் சென்ற காரை 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக்டாக் செயலியின் சீன வெர்சனான Douyin செயலியில் பரவிய வீடியோவில், Fugui என்ற நாய் தன்னை வளர்த்த மணப்பெண் திருமணமாகி வேறொரு ஊருக்குச் செல்வதை அறிந்து அவரது காரின் பின்னால் 10 கிலோ மீட்டர் தூரம் ஒடியுள்ளது.

தெற்கு சீனாவின் ஹூனான் நகரைச் சேர்ந்த Ms Fu என்ற பெண் திருமணமாகி, தனது கணவர் வீட்டுக்கு காரில் செல்கிறார். அப்போது, அந்த காரைப் பின்தொடரும் வளர்ப்பு நாயான Fugui, Ms Fu-வை பிரிய மனமில்லாமல் 10 கிலோ மீட்டர் தூரம் இடைவிடாமல் ஓடிச் செல்கிறது. இதனை திருமண வீடியோவை எடுத்த கேமராமேன் சிறப்பாக படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் நெகிழச்செய்கிறது.நாயின் பாசம் குறித்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், 2 ஆண்டுகளாக Ms Fu, Fugui -ஐ மிகவும் அக்கறையோடு வளர்த்து வந்தார். திருமணமானவுடன், தான் செல்லும் காரிலேயே Fugui -ஐ ஏற்றிச்செல்ல விருப்பப்பட்டார். ஆனால், வளர்ப்பு நாய் காரில் ஏறவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் காரில் நாய் ஏறவில்லை. ஆனால், Ms FU காரில் கிளம்பியவுடன் அவரது பின்னால் ஓடிச்சென்றது. இது அனைவரையும் நெகிழச்சியடையச் செய்தது என்றார்.

Also read: தூத்துக்குடி: 18 நாட்களாகியும் வீடுதிரும்பாத மகள்.. கண்டுபிடித்துத் தரக்கோரி பெற்றோர்கள் தர்ணா

காரின் பின்னாலேயே சென்ற நாய், ஒரு கட்டத்தில் அதனால் ஓட முடியவில்லை. பின்னர், மிகவும் சோகத்துடன் Ms FU சென்ற காரை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளது. மற்றொரு வீடியோவில், திருமணத்துக்கு அடுத்தநாள் தந்தை வீட்டிற்கு வந்த Ms FU-வுடன் Fugui மகிழ்ச்சியோடு விளையாடுகிறது. இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. லட்சக்கணக்கானோர் லைக்ஸ்களையும், கமெண்டுகளையும் அள்ளி வருகின்றன.

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், நாயின் இந்தச் செயல் மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. வீடியோவைப் பார்த்தவுடன் நான் அழுதுவிட்டேன், சிறிய விலங்குகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மற்ற சிலர், மணப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். காரில் நாயை ஏற்றிச் சென்று இருக்கவேண்டும் என்று சிலரும், நாய் இப்படி ஓடி வருவதை அனுமதித்திருக்கக் கூடாது என்று சிலரும் விமர்சித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: