தண்ணீரில் தத்தளித்த உரிமையாளருக்கு நாய் செய்த சம்பவம் - நெகிழ வைக்கும் வீடியோ!

நெகிழ வைக்கும் வீடியோ!

இந்த வீடியோ குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நாயின் உரிமையாளர், தான் வளர்க்கும் நாய் என்மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறது என்பதை இன்று தெரிந்துகொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் தத்தளிப்பதாக நாடகமாடும் உரிமையாளரை காப்பாற்றுவதற்காக நாயும் தண்ணீரில் குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாய்களின் விசுவாசத்துக்கு ஈடு இணையே இருக்காது என பலரும் கூறக் கேட்டிருப்போம். வளர்க்கும் நபருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அந்த நேரத்தில் சமயோசித்தமாக செயல்பட்டு அவர்களின் உயிரைக் காப்பாற்றும் வீடியோக்களை பார்த்திருக்கிறோம். டிவிட்டரில் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவும் நாயின் விசுவாசத்தைக் காட்டுகிறது.

நீச்சல் குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கும் உரிமையாளரை கருப்பு நிற நாய் தரையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் அவர், நாயின் விசுவாசத்தை சோதிக்க முயற்சிக்கிறார். அப்போது, தரையில் நின்றுகொண்டிருக்கும் நாய்க்கு அருகாமையில் நீந்தி செல்கிறார். பின்னர், தண்ணீரில் மூழ்குவது போல் நாடகமாடுகிறார்.

ALSO READ |  உலகிலேயே அதிக எடையுள்ள அம்ராபுரி மாம்பழங்களை வளர்க்கும் மத்தியபிரதேச சகோதரர்கள்!

இதனை பார்த்த நாய் அவரைக் காப்பாற்ற வேண்டும் என துடிக்கிறது. அங்கும் இங்கும் ஓடும் நாய், என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறது. அதற்கு நீச்சல் தெரியாத நிலையிலும், நீச்சல் குளத்தில் குதித்துவிடுகிறது. வேகவேகமாக உரிமையாளரிடம் சென்று ஆரத் தழுவிக் கொள்கிறது. நாயின் இந்த செயலால் உரிமையாளரும், அங்கு இருப்பவர்களும் மெய்சிலிர்த்து போகின்றனர். ஆரவார குரல் எழுப்பும் அவர்கள், கைத்தட்டி நாயை பாராட்டுகின்றனர்.

 

  

SacManSpin என்ற டிவிட்டர் ஐடியில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளனர். நாயின் விசுவாசத்தை மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

ALSO READ |  தேவாலயத்தில் புகுந்த முதலை - சர்ச்சையில் சிக்கிய பாதிரியார்!

இதுவரை 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நாய் வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோ குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நாயின் உரிமையாளர், தான் வளர்க்கும் நாய் என்மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறது என்பதை இன்று தெரிந்துகொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாயின் செயலை பாராட்டியுள்ள நெட்டிசன்கள், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளனர். வீட்டில் வளர்க்கும் நாய், பூனை தங்கள் மீது கொண்டிருக்கும் அன்பு மற்றும் ஆபத்து காலத்தில் துரிதமாக காப்பாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். டிவிட்டரில் மட்டும் சுமார் 3 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ கடந்துள்ளது. இதேபோல் பல வீடியோக்கள் வெளிவந்திருந்தாலும், இப்போதைய டிரெண்டிங்கில் இந்த நாயின் வீடியோ இடம்பெற்றுள்ளது.

 அண்மையில், கேரளாவில் இறந்த பாகனுக்கு யானை நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சிறுவயது முதல் பராமரித்த பாகன், நோய்வாய்ப்பட்டு இறந்ததை அதனால் ஜீரணிக்க முடியவில்லை.

 யானை அழுததை பார்த்து அங்கிருந்தவர்களும் அழுதனர். பாகனின் உடலை பார்ப்பதற்காக சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து யானை அழைத்துவரப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: