நீச்சல்குளத்தில் இளம்பெண்ணை மீட்டெடுத்த நாய்! அமிதாப் பச்சனை கவர்ந்த வீடியோ

Vijay R | news18-tamil
Updated: August 21, 2019, 7:52 PM IST
நீச்சல்குளத்தில் இளம்பெண்ணை மீட்டெடுத்த நாய்! அமிதாப் பச்சனை கவர்ந்த வீடியோ
இளம்பெண்ணை மீட்கும் நாய்
Vijay R | news18-tamil
Updated: August 21, 2019, 7:52 PM IST
நீச்சல்குளத்தில் முழ்கியது போல் நடிக்கும் பெண்ணை பாய்ந்து சென்று மீட்கும் நாயின் வீடியோவை டிவிட்டரில் அமிதாப்பச்சன் ரசித்து பகிர்ந்து உள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதல் தேர்வாக நாயாக தான் இருக்கும். பலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை விட வீட்டில் அவர்கள் வளர்க்கும் நாயுடன் மிகவும் அன்பாக இருப்பார்கள்.

வீட்டில் வளர்க்கும் நாய்களுடன் இணைந்து எடுத்து கொள்ளும் புகைப்படம், அவைகள் செய்யும் சேட்டை ஆகியவற்றை சமூகவலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுப்போன்ற வீடியோவை இளம்பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Loading...அந்த வீடியோவில் நீச்சல்குளத்தில் முழ்கி தத்தளிப்பது போல் நடிக்கும் இளம்பெண்ணை அவர் வளர்க்கும் நாய் பாய்ந்து சென்று காப்பாற்றி மேலே கொண்டு செல்கிறது. 1 மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்து ரசித்த இந்த வீடியோவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் ரசித்து  ரீட்வீட் செய்துள்ளார்.

Also Watch

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...