ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

நாயின் வீடியோ வைரல்

நாயின் வீடியோ வைரல்

Trending Video | நாய்கள் வீட்டை காக்கும் பாதுகாவலன் மட்டுமல்ல, அதன் உரிமையாளரின் நண்பன் என்பதை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மீண்டும் நிரூபித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடீஸ்வரர்கள் முதல் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் வரை அனைவருமே செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் நாய்கள் எப்போதுமே மனிதர்களின் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். வீட்டை பாதுகாப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, வீடு திரும்பும் எஜமானரை பாசத்துடன் வாலாட்டி வரவேற்பது, வேட்டையாடுவதில் உதவுவது, வாக்கிங் செல்வது என நாய் மனிதர்களுடன் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறது. கற்காலம் தொட்டு இக்காலம் வரை மனிதர்கள் நாகரீகம் என்ற பெயரில் பல முன்னேற்றம் அடைந்திருந்தாலும் நாய்கள் அன்றிலிருந்து இன்று வரை மனிதர்கள் மீது ஒரே அளவிலான அன்பைக் கொண்டுள்ளன.

தனது எஜமானருக்கு என்னத் தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடிய புத்திசாலித்தனமான நாய்களின் வீடியோக்கள் சில சமயம் இணையத்தை கலக்குவது உண்டு. அப்படிப்பட்ட நாய் ஒன்றின் வீடியோவை பற்றித் தான் தற்போது பார்க்கப்போகிறோம். மனோஜ் சர்மா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த முறை முழு பண்ணையையும் அறுவடை செய்யும் ஒப்பந்தம் இவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது" என்ற கேப்ஷன் உடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

30 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், குட்டை இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று தனது எஜமானரான விவசாயிக்கு உதவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில், சோள பயிரப்பட்டுள்ள வெள்ளை நாய் ஒன்று, பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கே டப் கொடுக்கும் வகையில், தனது கூர்மையான பற்களால சோளக்கதிர்களை வெட்டி சாய்க்கிறது. வேக, வேகமாக வேலை செய்தாலும் ஒரு சோளக்கதிர்கள் கூட கீழே சிந்தாமல் அழகாக பயிர்களை அறுவடை செய்து அசத்துகிறது. தன்னை வளர்த்த விவசாய குடும்பத்தினருக்காக இப்படி நாய் ஒன்று வயலில் பாடுபடும் வீடியோ இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோ இதோ...

அக்டோபர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த விடியோவானது தற்போது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த நாய்க்குட்டியின் கடின உழப்பை 1.52 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு வியந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், ஏராளமானோர் கமெண்ட் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.

Also Read : நீருக்கடியில் சுறா மீனோடு டூயட் பாடி நடனமாடிய நபர்... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், “இப்படி ஒரு நாய் எங்கே கிடைக்கும்?... எங்கள் வயலிலும் கால்நடை தீவனத்தை வெட்ட வேண்டி உள்ளது” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “தீபாவளிக்காக அதன் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகளை வாங்குவதற்காக கஷ்டப்பட்டு உழைக்கிறது” என பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபர் நாயை பாகுபலியுடன் ஒப்பிட்டு, “வயலில் உள்ள பயிர்களை பாகுபலி சரியாக வெட்டிவிட்டார்” என புகழ்ந்துள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Dog, Tamil News, Trending, Viral Video