• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • உணவை திருடிய போது ஓனரிடம் மாட்டிக்கொண்ட நாய் - க்யூட் வைரல் வீடியோ

உணவை திருடிய போது ஓனரிடம் மாட்டிக்கொண்ட நாய் - க்யூட் வைரல் வீடியோ

 க்யூட் வைரல் வீடியோ

க்யூட் வைரல் வீடியோ

கோல்டன் ரெட்ரீவர் நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    நாய் ஒன்று தனக்கு பசித்ததற்காக உணவினை எடுக்க சமையலறை பக்கம் சென்று உரிமையாளரிடம் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நாய் வளர்ப்பு பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. செல்லப்பிராணிகளாக பூனை, பறவைகள், மீன்கள் , ஏனைய விலங்குகளை வளர்ப்பதை காட்டிலும் நாய்களை வளர்ப்பதை பலரும் பிடித்த ஒன்றாக கருதுகின்றனர். தற்போது கோல்டன் ரெட்ரீவர் நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. @beckx28 என்ற பயனர் ஒருவர் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நாய் ஒன்று உணவைத் திருட முயன்ற போது அதன் உரிமையாளர் நாயின் செயலை கவனித்து கொண்டிருக்கின்றார்.

    உணவினை சமையல் அறையில் இருந்து நாசுக்காக எடுக்கும் நாய் அதன் வாயால் சமையல் அறையில் இருக்கும் இரண்டு டப்பாக்களை எடுக்க முயற்சி செய்து பின்னர் மேல் பகுதியில் இருக்கும் சிறிய டப்பாவை வாயால் கவ்விக்கொண்டு செல்கின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் உரிமையாளர் நாயினை சற்று கண்டித்து வைக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது.

     

     



     

    இதே போன்று சமீபத்தில் கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து சாதனை படைத்திருக்கிறது. பின்னிபாய்மோலி என்பவர் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருகிறார்.

    வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து கின்னஸ் சாதனை படைத்த நாய்


    2017ம் முதலில் பின்னிபாய்மோலியின் தந்தை இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வந்த நிலையில், இந்த நாய் வாயில் டென்னிஸ் பந்துகளைத் தொடுவதற்கு ஒரு தனித்துவமான திறமை இருப்பதை கண்டறிந்தார். அவர் அடிக்கடி கோல்டன் ரெட்ரீவருக்கு ஒரு டென்னிஸ் பந்தை எறிவார். அது அந்த பந்தை பிடித்து மீண்டும் அவரிடமே எறிந்து விளையடும்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Finley Molloy (@finnyboymolloy)






    அவர் சில காலமாக இப்படியே பந்தை பிடிக்கும் பயிற்சி அளித்தார். இதனை தொடர்ச்சியாக ஒரு நாள் இதனை ஏன் சாதனையாக செய்யக்கூடாது என்ற யோசனை தோன்றியது.



    எனவே கோல்டன் ரெட்ரீவருக்கு தினமும் பயிற்சி அளித்து வந்துள்ளார். பின்னிபாய்மோலி தந்தைக்கு பின்னர் அவரே இந்த பயிற்சியை தொடர்ந்து வழங்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: