முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தொடர் ஓட்டத்தில் புகுந்த நாய்... போட்டியில் வெற்றி பெற்று அசத்தல் - வைரல் வீடியோ!

தொடர் ஓட்டத்தில் புகுந்த நாய்... போட்டியில் வெற்றி பெற்று அசத்தல் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

திடீரென ஓட்டப்பாதையில் நுழைந்த நாய் ஒன்று போட்டியாளர்களுக்கு இணையாக ஓடியது.நாயின் இந்த சேட்டை வீடியோ இணையத்திலும் வைரலாகியுள்ளது. பலரும் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் புகுந்த நாய் ஒன்று போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உட்டா (UTAH) -வில் பள்ளிச் சிறுமிகளுக்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. 200 மீட்டர் தொலைவிலான தொடர் ஓட்டம் நடைபெற்றபோது சிறுமிகள் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டப்பாதையில் நுழைந்த நாய் ஒன்று போட்டியாளர்களுக்கு இணையாக ஓடியது.

பின்னர் அனைவரையும் முந்திச் சென்ற நாய், கடைசியாக எல்லைக் கோட்டை முதல் ஆளாக கடந்து போட்டியிலும் வெற்றி பெற்றது. போட்டியை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும், நாய் போட்டியாளர்களை முந்திச் செல்வைதக் கண்டு ஆரவாரக் குரல் எழுப்பினர்.

ALSO READ : பைபிள் ஓதி முயல்களுக்கு திருமணம் - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

லோகன் உயர்நிலைப் பள்ளியில் இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டியில் முன்னணியில் சென்று கொண்டிருந்த கேட் ஹேவுட் (Kate Heywood) எல்லைக் கோட்டை அடைவதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்.

திடீரென பார்வையாளர்களின் கூச்சல் அதிகரித்ததால் வேறொருவர் முந்திச் செல்ல வருவதாக கருதி, இன்னும் வேகமாக ஓடினார். அவர் எல்லைக் கோட்டை அடைவதற்கு நொடிப் பொழுது முன்பாக, அவரை ஹோலி நாய் முந்திச் சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பின்னர் சம்பவத்தைக் கேட்டு சிரிப்பில் மூழ்கினார்.

ALSO READ : ஸ்காட்லாந்தில் கடையில் நுழைந்து டுனா சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை : வைரலாகும் வீடியோ!

போட்டி முடிந்த பிறகு பேசிய கேட் ஹேவுட் (Kate Heywood), " 4x200 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பல அணிகள் கலந்து கொண்டோம். அனைவரும் எல்லைக் கோட்டை அடைவதற்காக வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தனர். எங்கள் அணியின் மற்றொரு வீராங்கனை வேகமாக ஓடிவந்து தொடர் ஓட்டக் குச்சியை எண்ணிடம் கொடுத்தார். எல்லைக் கோட்டை அடைந்து வெற்றியை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு கடைசியாக என்னிடத்தில் இருப்பதால், தொடர் ஓட்டக் குச்சி கிடைத்தவுடன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன்.

' isDesktop="true" id="454125" youtubeid="1gXCukkTp6w" category="trend">

வேகமாக ஓடும்போது நான் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். திடீரென, பார்வையாளர்கள் கூச்சலிடத் தொடங்கியதால் போட்டியாளர் ஒருவர் வேகமாக ஓடிவருகிறார் என எண்ணிக் கொண்டேன். திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் என்னுடைய வேகத்தை அதிகரித்தேன். எல்லைக் கோட்டை அடைவதற்கு சிறிது தொலைவு முன்பாக ஓரக்கண்ணில் பார்த்தபோது சிறியதாக ஒன்று ஓடிவருகிறது என உணர்ந்தேன்.

ALSO READ : இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா?

இருப்பினும், வெற்றி பெற வேண்டும் என எண்ணி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென நாய் ஒன்று என் காலடியில் ஓடி வந்து, முந்திச் சென்றது. போட்டி முடிந்த பிறகே நாய் ஓன்று ஓட்டப்பந்தய தளத்துக்குள் நுழைந்து எங்களை வீழ்த்திய உணர்நதேன். இது எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது" என்றார்.

நாயின் இந்த சேட்டை வீடியோ இணையத்திலும் வைரலாகியுள்ளது. பலரும் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.

First published:

Tags: Dog, Viral Video