ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மக்கள் அதிகம் நம்புவர்கள் பட்டியலில் மருத்துவர்கள் முதலிடம் ... நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

மக்கள் அதிகம் நம்புவர்கள் பட்டியலில் மருத்துவர்கள் முதலிடம் ... நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

உலக அளவில் மருத்துவர்களையே மக்கள் அதிகமாக நம்புவது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்ஸோஸ் என்ற பன்னாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், மக்கள் எந்த பிரிவினரை அதிகம் நம்புகிறார்கள் என்ற ஆய்வை மேற்கொண்டது. அதில் மக்கள் அதிகமாக மருத்துவர்களையே நம்புவதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களை மட்டுமே நம்புவதாக 54 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.

  இதற்கு அடுத்த படியாக விஞ்ஞானிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என 51 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். அடுத்தபடியாக ஆசிரியர்களை அதிகம் நம்புவதாக 43 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். சாதாரண பொது மக்களை 27 சதவீதத்தினரும் ராணுவ வீரர்களை 22 சதவீதத்தினரும் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

  Also Read : லாக்டவுனுக்கே லாக் போட்ட போலீசார்... மணப்பாறையில் ருசிகர சம்பவம்

  நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகள் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள். 52 சதவீத மக்கள் அரசியல்வாதிகளை நம்ப கூடாது என தெரிவித்துள்ளனர். இதில் இந்திய மக்களும் மலேசிய மக்களும் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  அர்ஜென்டினா மற்றும் கொலம்பிய மக்கள் அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர். நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அடுத்து இடம் பிடித்துள்ளவர்கள் அரசு அமைச்சர்கள். அவர்களுக்கு மைனல் 39 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. விளம்பரதாரர்களும் வங்கியாளர்களும் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர். நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்துள்ளவர்கள் பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு மைனஸ் பத்து சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Viral