• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மருத்துவர்களின் 'மலச்சிக்கல் நடனம்'! வைரல் வீடியோ

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மருத்துவர்களின் 'மலச்சிக்கல் நடனம்'! வைரல் வீடியோ

  • Share this:
பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர்கள் சிலர் மலச்சிக்கல் ஏற்பட்டால் எப்படி அவதிப்படுவோம் என்பதை நடனமாக ஆடி காட்டி உள்ள வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

நமக்கு, எந்த வியாதி ஏற்பட்டாலும் அதனுடைய பாதிப்பு நேரடியாக நமக்குத் தான் இருக்கும். ஆனால் மலச்சிக்கல் அருகில் இருப்பவர்களையும் சேர்த்தும் பாதிக்கும். வயிற்று சிக்கல் ஏற்பட்டால் நாள் முழுவதும் அசௌகரியமாக உணர்வோம். இந்த சங்கடத்தை நகைச்சுவையாக சித்தரித்து மருத்துவர்கள் சிலர் நடனம் மூலமாக வெளிப்படுத்தி உள்ளனர்.

மருத்துவர்களின் இந்த மலச்சிக்கல் நடனம் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் மருத்துவர்கள் மலச்சிக்கலினால் ஏற்படும் அசௌகரியத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களின் நடனத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்கின்றனர்.



இந்த வீடியோவில் உள்ள ஆடியோவில் இருந்து பார்வையாளர்களின் சிரிப்பும் கேளிக்கைகளும் தெளிவாக தெரிகிறது. வைரலாகும் இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: