Home /News /trend /

ஒன்றல்ல, இரண்டல்ல... வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒன்றல்ல, இரண்டல்ல... வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

வயிற்று வலி என வந்த நபருக்கு ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள MDH மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளியின் வயிற்று வலிக்கான காரணம், அவருடைய டிப்ரஷன்!

    சிறிய வயதில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்கள், விபத்து, நெருங்கிய நபரின் இழப்பு, இறப்பு ஆகியவை பல ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் ஒருசிலர் தீவிரமான மனநல பிரச்சனைக்கு உள்ளாகலாம். இந்த விளைவு வேடிக்கையான, வினோதமான அல்லது பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும். உதாரணமாக, திரைப்படங்களில், சீரியல்களில் வெப் சீரிஸ்களில் இது போன்ற நிகழ்வுகளை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். பொம்மையின் தலையை விழுங்கும் பழக்கம் ஒரு நபர், அதேபோல தலைமுடியை மென்று சாப்பிடும் பழக்கம் கொண்ட ஒரு பெண், மேலும், ஆசன வாயில் beer பாட்டிலை செலுத்த முயன்று தீவிர காயம் அடைந்தவர், போன்றவை.

    ஏதோ ஒரு காரணத்துக்காக இவ்வாறு செய்பவர்கள் உடல் நலம் தீவிரமாக பாதிப்படையும் போது, மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுகிறார்கள். அதேபோல ஜோத்பூரில் சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய நோயாளி ஒருவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அவருடைய வயிற்றில் இருந்து 63 நாணயங்களை ஒரு மருத்துவர் வெளியே எடுத்துள்ளார்.

    தீவிரமான வயிற்று வலி என்று ஒரு நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். பொதுவாக வயிற்று வலி என்று வரும் பொழுது எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் செய்யப்படும். தீராத வயிற்று வலிக்கு உணவு ஒவ்வாமை, குடல் புண், நாட்பட்ட அசிடிட்டி, குடல் அழற்சி என்று பல காரணங்கள் உள்ளன. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள MDH மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளியின் வயிற்று வலிக்கான காரணம், அவருடைய டிப்ரஷன்! வயிற்று வலிக்கும் டிப்ரஷனுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று நீங்கள் யோசிக்கலாம். அவர் தீவிரமான மன சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால், நாணயங்களை விழுங்கத் தொடங்கியுள்ளார்.

    Also Read : சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்த செல்லக்குட்டி

    காஸ்ட்ரோ-எண்டராலாஜி துரையின் தலைவரான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் இதைப் பற்றி கூறுகையில், ‘நோயாளியின் வயிறு நாணயங்களால் குவிந்துள்ளது. அவரை பரிசோதிக்கும் போது, 10 அல்லது 15 நாணயங்கள் தான் விழுங்கி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், வயிற்றில் குவிந்திருந்த நாணயங்களின் அளவைப் பார்க்கையில் ஒரு மினி சைஸ் மலை போல இருந்தது’ என்று தெரிவித்தார்.

    மினிமலி இன்வேசிவ் சர்ஜரி என்று கூறப்படும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம், ஒவ்வொரு நாணயமாக மருத்துவர் வெளியே எடுத்துள்ளார். மொத்தமாக நோயாளியின் இருந்த நாணயங்களின் எண்ணிக்கை 63! ஒரு மருத்துவக் குழுவை நியமித்து, இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முழுவதுமாக முடிய 2 நாட்கள் ஆனது என்று கூறப்படுகிறது.

    தீவரமான டிப்ரஷனால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது உடல் ரீதியாக முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும், அவரது மன நல ஆரோக்கியம் மேம்பட, சைக்கியாட்ரிக் சிகிச்சை பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி