• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நோயாளியின் வயிற்றில் 1 கிலோ நகங்கள், ஸ்க்ரூ, கத்திகளை அகற்றிய மருத்துவர்கள்

நோயாளியின் வயிற்றில் 1 கிலோ நகங்கள், ஸ்க்ரூ, கத்திகளை அகற்றிய மருத்துவர்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

லிதுவேனியாவில் ஒருவர் வயிற்றில் இருந்து சுமார் 1 கிலோ எடையுள்ள நகங்கள், ஸ்க்ரூ என்ற திருகாணிகள் மற்றும் கத்திகளை மருத்துவர்கள் அகற்றி இருக்கிறார்கள்.

  • Share this:
ஐரோப்பாவில் அமைந்துள்ளது லிதுவேனியா நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வயிற்று வலி என்று ஒரு நோயாளி வந்து சேர்ந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நோயாளியின் வயிற்று பகுதியை ஸ்கேன் செய்தனர். அதில் அவரது வயிற்றில் கிட்டத்தட்ட 1 கிலோ நகங்கள், ஸ்க்ரூ மற்றும் கத்திகள் உள்ளதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் பால்டிக் போர்ட் சிட்டியில் உள்ள ‘க்ளைபெடா பல்கலைக்கழக மருத்துவமனையில்’ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த நபர் வயிற்றில் உள்ள ஸ்க்ரூ, கத்தி, நகங்கள் போன்றவற்றை அவரே விழுங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனித உடலுக்குள் செல்லும் உலோகம் சார்ந்த பொருள்கள் வயிற்றில் உள்ள உள் சுவர்களை சேதப்படுத்தும். ஆனால் கடந்த ஒரு மாதங்களாக அந்த நபரின் வயிற்றில் இவ்வளவு பொருள்கள் எப்படி இருந்தது என எங்களுக்கே வியப்பாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் அவருடைய வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட கத்தி, நகம் மற்றும் ஸ்க்ரூ போன்றவைகளில், சில உலோக துண்டுகள் 10 சென்டிமீட்டருக்கும் மேலாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் ஆனதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, அந்த நோயாளி தற்போது ஆரோக்கியமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் வயிற்றில் இருந்து பொருட்களை அகற்றுவதற்கு அதிக நேரம் எடுக்காது. ஆனால் இந்த விஷயத்தில் 2 மி.மீ முதல் 10 செ.மீ வரையிலான ஒவ்வொரு உலோகத் துண்டுகளையும் கண்டுபிடித்து அகற்ற வேண்டியிருந்ததால், கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஆனது என்று கூறுகிறார்கள்.

Also Read : 'ஈ சாலா கப் நமதே' விருதை கேட்டு வாங்கிய விராட் கோலி - இணையத்தில் கவனம் பெறும் நகைச்சுவை வீடியோ

வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அந்த நபர் நகங்களை விழுங்கியதை கூறவில்லை, வெறும் வயிற்று வலிதான் என்று கூறியிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த நபருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, 1 கிலோவுக்கும் மேலான நகங்கள், கத்திகள் மற்றும் ஸ்க்ரூ போன்ற திருகாணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்நபர் தற்போது நலமாக உள்ளார் என்று மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வித்தியாசமானதாக இருந்தாலும், இது போன்ற செயல்கள் உலகெங்கிலும் அடிக்கடி நடந்து கொண்டு தான் வருகிறது. மருத்துவத் துறையில் இது போன்ற சம்பவங்கள் இயல்பாகி விட்டது. சிலர் நாணயங்கள், முடிகள், ஊசிகள் போன்ற பொருள்களை விழுங்குகின்றனர். இன்னும் சிலரோ ஸ்பூன் மற்றும் கரண்டிகளையும் விழுங்கி இருக்கின்றனர் என்று கிளிபீடா பல்கலைக்கழக மருத்துவமனையின் வயிறு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் அல்கிர்தாஸ் ஸ்லெபாவிசியஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: