சிறுவயதில் ஏதேனும் பொருளை குழந்தைகள் விழுங்கி விடுவதும் அவற்றை நாம் சரி செய்ய மருத்துவரிடம் ஓடுவதும் வழக்கமன ஒன்றே. ஆனால் இங்கு ஒரு சிறுமி சற்றே விநோதமான ஒரு செயலை செய்திருக்கிறார்.
சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு உண்ண முடியாமல் இருந்திருக்கிறார். மேலும் அவரது தலை வழுக்கையாய் இருந்திருக்கிறது. சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்திருக்கிறார்கள். சோதனையின் முடிவில் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்து தலைமுடியை அகற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு சிறுமியின் வயிற்றுக்குள் முடி இருந்ததால் அந்த சிறுமியால் உணவு உட்கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து முடியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றியிருக்கிறார்கள். எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து ஆராய்ந்த போதுதான் விபரீதமான உண்மை தெரியவந்துள்ளது.
Read More : எலான் மஸ்க் படுக்கை அருகே துப்பாக்கி - இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டோ!
ஷான்சி இமாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு ‘பிகா’ என அழைக்கப்படும் விநோத பழக்கம் இருந்துள்ளது. அதாவது இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அசாதாரணமான, சாப்பிடக் கூடாத பொருட்களை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் அழுக்கு, காகிதம், களிமண் போன்ற பொருட்களை விரும்பி உண்ணுவார்கள். பொதுவாக இந்த மனநிலை கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அந்த சிறுமிக்கு டிரிகோடிலோமேனியா என்கிற தனது தலைமுடியை பிய்த்து தானே உண்ணும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தாய் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிறுமி தனது தாத்தா- பாட்டி கண்காணிப்பில் இருந்துள்ளார். கண்காணிக்க யாரும் இல்லாததால் சிறுமிக்கு இந்தப் பழக்கம் இருந்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆபத்தான நிலைக்கு சிறுமி தள்ளப்பட்ட பிறகே இந்த விநோத பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடி அகற்றப்பட்ட பிறகு சிறுமிக்கு மற்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிறுமிக்கு இருக்கும் அந்த விநோத பழக்கவழக்கத்தில் இருந்து சிறுமியை மீட்பதற்கான உளவியல் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நம் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, அவர்களின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்களை நாம் கண்காணித்தால் இது போன்ற பேராபத்துக்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றி விடலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.