10 மாதக் குழந்தையிடம் பாட்டு பாடி அழ விடாமல் ரத்தம் எடுத்து அசத்திய டாக்டர்... வைரல் வீடியோ

இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் .

10 மாதக் குழந்தையிடம் பாட்டு பாடி அழ விடாமல் ரத்தம் எடுத்து அசத்திய டாக்டர்... வைரல் வீடியோ
பாட்டு பாடும் மருத்துவர்
  • News18
  • Last Updated: November 12, 2019, 8:22 PM IST
  • Share this:
10 மாதக் குழந்தையிடம் பாட்டு பாடும் மருத்துவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும்போது வலி ஏற்படாமல் இருக்க குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீ Nat King Cole’s classic என்ற பாடலை பாடி அசத்துகிறார். அந்தக் குழந்தையும் எந்தவித சலனமுமின்றி மருத்துவரின் பாடலைக் கேட்டு ரசிக்கிறது. அவரும் தேவையான இரத்தத்தை எடுத்துகொள்கிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து மருத்துவர் ரியான் கொய்ட்ஸீயிடம் கேட்ட போது “ இப்படி பாட்டு பாடுவது வாடிக்கையாக நான் செய்வதுதான். அது காண்போருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதனால் சிரிப்பார்கள், ரசிப்பார்கள். இது என்னுடைய மருத்துவ முறை என்று கூறியுள்ளார். அவர் மருத்துவம் மட்டும் படிக்கவில்லை முறையான கிளாசிக்கல் மியூசிக்கும் கற்றறிந்துள்ளார்.
இந்த வீடியோவை குழந்தையின் தாய் கிரேஸி என்பவர்தான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் “ இதற்கு முன் இப்படியான மருத்துவரைச் சந்தித்ததே இல்லை. காணும் யாரையும் சிரிப்புடனே வரவேற்கிறார். சிரித்த முகத்தோடு உற்சாகமாக அவர் இருப்பதே பாசிடிவ் எண்ணத்தை உருவாக்குகிறது. என்னுடய நாளை அவர்தான் சிறப்பாக்கியுள்ளார். என் மகள் இரத்தம் எடுத்தபோது எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் விளையாடினாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள் இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

 
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்