வெளியே வரும்போது 'கோட் போட்டுக்கோ, ரொம்ப பனியா இருக்கு'-வைரலாகும் ஒரு டாக்டரின் தாய் சொன்ன செய்தி!

வெளியே வரும்போது 'கோட் போட்டுக்கோ, ரொம்ப பனியா இருக்கு'-வைரலாகும் ஒரு டாக்டரின் தாய் சொன்ன செய்தி!

காட்சிப் படம்

ஒரு டாக்டரின் தாய் அவர் வேலையில் இருந்த போது சொன்ன செய்தி, தற்போது இணைய வாசிகளை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

  • Share this:
நோயுடன் தன்னிடம் வந்தவர்களை குணமாக்கி அனுப்புவதே மருத்துவர்களின் தலையாய கடமை. நம்மை குணமாக்குவது மருத்துவர்கள் என்றால் எப்போதும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஜீவன்களான மருத்துவர்களை கவனித்துக்கொள்வது யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் அமீர்கானை பொருத்தவரை தன்னை கவனித்துக் கொள்வது அவரது தாய் என்று மறைமுகமாக ஒரு செய்கையில் உலகிற்கு கூறியுள்ளார். இதுகுறித்த பதிவில், டாக்டர் அமீர்கான் தான் பணிபுரியும் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டரில் சீரியஸ் ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறார். அப்போது தன் தாயிடம் இருந்து பல மொபைல் அழைப்புகள் அவருக்கு வருகிறது. ஆனால் அவரால் அதை எடுக்க முடியவில்லை. 

இதனையடுத்து  அந்த டாக்டரின் தாய், அவரிடம் கூற வந்ததை மருத்துவமனையின் ரிசப்ஷனில் இருந்தவரிடம் எழுதி கொடுத்துள்ளார். அது அந்த டாக்டரிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதில் "வெளியே ரொம்ப பனியா இருக்கு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வரும்பொழுது கோட் போட்டுக்கோ" என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி தான் இண்டர்நெட்டில் பலரின் கண்களில் கண்ணீரை வர வைத்துள்ளது. இந்த செய்தி சாதாரணமானதல்ல, பெற்றெடுத்த பிள்ளைகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களின் உண்மை மனநிலைதான் இது. 

 


"பேட்டா, ஸ்வெட்டர் பெஹன் லோ (குழந்தாய், தயவுசெய்து ஸ்வெட்டர் போட்டுக்கொள்)" என்ற பிரபலமான வரியைக் கேட்ட பலரும் உணர்ச்சி பெருக்கெடுத்து தங்களின் மனநிலையை கமெண்ட்டில் கொட்டியுள்ளனர். பிப்ரவரி 9ம் தேதி ஷேர் செய்யப்பட்ட இந்த போஸ்டில், தங்கள் தாய்மார்களிடமிருந்து இதேபோன்ற ஆலோசனையை அனுபவித்தவர்களில் பலர் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளை கூறியுள்ளனர். 

தாயின் பாசத்தால் நெஞ்சை துளைக்கும் இந்த போஸ்ட் இதுவரை 72,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. உனா கல்கின் என்ற யூசர் இந்த செய்தியை அருமையானது என்றும் இதே போன்ற ஆலோசனைகள் ஐரிஷ் தாய்மார்களிடமிருந்தும் வரக்கூடும் என்றும் கூறினார். அந்த செய்திகளை மதிக்கும்படி அமீரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் தாய்மார்கள் அப்படி ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பதைதான் நேசிக்கிறேன் என்று உனாவின் ட்வீட்டுக்கு டாக்டர் பதிலளித்தார்.

அமீரின் தாயை உனா, ஐரிஷ் அம்மாக்களுடன் ஒப்பிட்டபோது, ஜூலியா பிராட்பரி என்ற மற்றொரு யூசர் தனது கிரேக்க தாயும் அமீரின் தாயைப் போலவே இருப்பதாகக் கூறினார். இதற்கு அமீர், ஆசிய மற்றும் கிரேக்க அம்மாக்கள் பாசத்தில் ஒருவரை போல் மற்றொருவரும் இருக்கிறார்கள் என்று கூறினார்.

தாய்மார்களின் கவலையை விளக்கிய கேத்தி ஹட்சன் என்ற யூசர், என்னுடைய பையனுக்கு இப்போது 18 வயது அவன் என்னை விட உயரமாக வளர்ந்திருந்தாலும், அவன் ரோட்டைக் கடக்கும்போது நான் அவன் கையைப் பிடித்துக் கொண்டு தான் கடப்பேன் என்று கூறினார்.

 மற்றொரு ட்விட்டர் யூசரான எம்மா கசெல்லா, உங்கள் தாய் மாமாகானிடமிருந்து வந்த இந்த அற்புதமான செய்தியைத் டைப் செய்யும்போது ரிசப்ஷனிஸ்ட் கண்டிப்பாக தாயின் பாசத்தை கண்டு உருகியிருக்க வேண்டும் என்று கூறினார்.

வயதான டிரேசி, தனது குடும்பக் குழுவில் தான் அனுப்பியிருந்த மெசேஜின் ஸ்கிரீன் ஷாட் மூலம் இதற்கு கருத்துத் தெரிவித்தார், சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு தனது குழந்தைகளைக் கேட்டுக்கொண்டார். தனது குழந்தைகள் தனியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், அவர்களில் ஒருவர் இப்போது பெற்றோர் ஆகிவிட்டார். இருப்பினும் தாய்க்கு தன் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்று டிரேசி கூறினார்.

தேசிய சுகாதார சேவையில் (NHS) அமீர் ஒரு டாக்டர் மட்டுமல்ல அவர் எழுத்தாளராகவும் கட்டுரையாளராகவும் சமூகத்திற்கு பல நன்மைகளை சொல்லி வருகிறார். மேற்கண்ட நிகழ்வு உண்மையில் மனிதர்களுக்கு மட்டும்தானா என்றால் இல்லை. தாயுள்ளம் கொண்ட அனைத்து உயிரினங்களும் இதைப் போன்றுதான் தன் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் அன்பையும் பரிவையும் காட்டி வருகின்றது. அந்த வகையில் நாமும் நம் தாயை போற்றுவோம்.
Published by:Tamilmalar Natarajan
First published: