கோவிட் -19 நோயாளிகளுக்கு ரூ.10க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தம்பதி - பொதுமக்கள் நெகிழ்ச்சி!

டாக்டர் தம்பதி

மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து, ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் தொற்றுக்கு இரையாகின.

  • Share this:
கோவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு தெலுங்கானாவில் உள்ள ஒரு டாக்டர் தம்பதியினர் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறார்கள். கடந்த 3 மாதங்களாக நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிக வேகமாக மின்னல் வேகத்தில் பரவியதால் பல மாநிலங்கள் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறின. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து, ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் தொற்றுக்கு இரையாகின.

இதனை அடுத்து தொற்றை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கடந்த ஆண்டை போலவே லாக்டவுன் மற்றும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தற்போது நாடு முழுவதும் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்த பேரிடர் காலத்தில் பல துறையை சேர்ந்தவர்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதில் முக்கியமானவர்கள் மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள். கொரோனா தொற்றை எதிர்த்து மக்கள் போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதி முன்மாதிரியான சேவை ஒன்றை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து மிக மிக குறைந்த கட்டணம் மட்டுமே பெற்று கொண்டு அவர்களுக்கு சிகிச்சசை அளித்து உன்னத சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர் ராஜு மற்றும் அவரது டாக்டர் மனைவி பவானி ஆகியோர், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்று கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர் ராஜு ஒரு எலும்பியல் மருத்துவர், பவானி பொது மருத்துவர். தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பெயரளவிற்கே கட்டணங்களை வசூலிக்கிறார்கள் இந்த மருத்துவ தம்பதியர்.

Also read... வந்தே பாரத் மிஷன் அடுத்த கட்டம் - இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கைக்கு செல்லும் விமானம்!

சமீப நாட்களாக ஏராளமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பெடப்பள்ளி நகரத்தில் பதிவாகி வருகின்றன. இந்த நேரத்தில் டாக்டர் தம்பதியர் கொரோனா நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட இலவசமாக சிகிச்சை அளித்து வருவதற்கு அப்பகுதி மக்கள் மிகவும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து உள்ளனர். இந்த பெருந்தொற்று காலத்தில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சில தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வரும் நிலையில், வெறும் 10 ரூபாய்க்கு தொற்று நோயாளிகளுக்கு டாக்டர் தம்பதி சிகிச்சை அளிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து அவர்களின் சேவைகளை போற்றியுள்ளனர். தற்போதைய கொரோனா நெருக்கடியில் இந்த மருத்துவர்கள் தங்கள் நகரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் சிகிச்சை கட்டணத்தை ரூ.300-லிருந்து வெறும் ரூ.10 ஆக குறைத்துள்ளனர். வசதி இல்லாத ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு குறைந்த கட்டணத்தில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சேவைகளை தொடர் இந்த டாக்டர் தம்பதியர் உறுதியாக உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: