ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் ஏன் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிகிறார்கள் தெரியுமா!

ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் ஏன் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிகிறார்கள் தெரியுமா!

மாதிரி படம்

மாதிரி படம்

அறுவை சிகிச்சையின் போது மனிதர்களின் ரத்தம் மற்றும் உட்புற உறுப்புகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட மருத்துவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  மருத்துவமனைகளில் நோயாளிகளை பரிசோதிக்கும் போது மருத்துவர்கள் பொதுவாக வெள்ளை நிற கோட் போட்டிருந்தாலும், சர்ஜரி செய்யும் போது பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள்.

  20-ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஆப்ரேஷன் தியேட்டருக்கு சர்ஜரி செய்ய சென்ற மருத்துவர்கள் வெள்ளை நிற உடையை தான் அணிந்து வந்தார்கள். ஆனால் நாளடைவில் தான் சர்ஜரி ரூமில் பச்சை அல்லது நீல நிற உடையை மருத்துவர்கள் அணியும் பழக்கம் ஏற்பட்டது. 1914-ஆம் ஆண்டில், ஒரு பிரபல மருத்துவர் வெள்ளை ஆடைகளின் பாரம்பரியத்தை பச்சை நிற ஆடைகளாக மாற்றினார். இது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? இதற்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  ஆப்ரேஷன் தியேட்டரில் நடக்கும் சர்ஜரிக்கும் மருத்துவர்களின் ஆடை நிறத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நமக்கு தோன்றினாலும், இந்த நடைமுறை உண்மையில் ஒரு அறுவை சிகிச்சையின் வெற்றியைத் தீர்மானிக்கும் எங்கு கூறுகிறார்கள் நிபுணர்கள். என்ன தான் மருத்துவம் படித்து பல ஆப்ரேஷன்களை செய்திருந்தாலும் மருத்துவர்களும் மனிதர்கள் தான். அறுவை சிகிச்சை நிபுணர்கள் சில நேரங்களில் ஒரே நாளில் பல ஆப்ரேஷன்களை செய்ய நேரிடும்.

  அறுவை சிகிச்சையின் போது மனிதர்களின் ரத்தம் மற்றும் உட்புற உறுப்புகளை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட மருத்துவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தத்தை குறைப்பதில் பச்சை மற்றும் நீல நிறங்களின் பங்கு முக்கியமானதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தவிர கலர் வீலில் சிவப்பு நிறத்திற்கு எதிரானது பச்சை ஆகும். ஒரு சர்ஜன் கவன சிதறலின்றி மனதை ஒருமுகப்படுத்தி ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே பலன் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த நிறங்கள் (பச்சை & நீலம்) அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் சிறப்பாக பார்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  ட்விட்டரில் இருந்து பணி நீக்கம்.. மகிழ்ச்சியாகக் கொண்டாடும் 25 வயது இளைஞரின் வைரல் ட்வீட்.! 

   பச்சை மற்றும் நீல நிற ஆடைகள் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவரின் ஆடைகளில் இருக்கும் ரத்தக் கறைகளை எளிதாக அகற்றவும் உதவுகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் தங்கள் சக ஊழியர்களின் வெள்ளை நிற ஸ்க்ரப்களை நீண்டநேரம் பார்ப்பது அவர்களுக்கு தலைவலியை தூண்டியது. இப்படி பல காரணங்கள் கூறப்பட்டாலும் பெரும்பாலான அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பச்சை மற்றும் நீல நிற ஸ்க்ரப்களை அணிவது பெரும்பாலும் இந்த முக்கியமாக 2 காரணங்களுக்காக தான் என கூறப்படுகிறது.

  முக்கிய முதல் காரணம் என்னவென்றால் பலமணி நேர அறுவை சிகிச்சையின் போது தொடர்ந்து நோயாளியின் ரத்தம் தோய்ந்த உள்ளுறுப்புகளை ஒரு மருத்துவர் பார்த்து பார்த்து ஒருகட்டத்தில் பார்வையை கடினமாக்குகிறது. தனது பார்வையை மீண்டும் ரெஃப்ரஷ் செய்து கொள்ளும் கட்டாயத்திற்கு மருத்துவர் தள்ளப்படுகிறார். அந்த நேரம் அவர் பச்சை நிறத்தை பார்ப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். முக்கிய இரண்டாவது காரணம் என்னவெனில், ரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிறத்தை பார்த்தார்கள் என்றால் சில நொடிகளுக்கு மருத்துவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது என்பது ஒருகட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. தவிர வெள்ளை நிறத்தை பார்த்து விட்டு மீண்டும் ஆப்ரேஷனில் கவனம் செலுத்த முனையும் போது நோயாளியின் உட்புற உறுப்புகளில் வெள்ளை பேக்ரவுண்டில் கிரீன் இல்யூஷன் தோன்றி கவனசிதறலை ஏற்படுத்தும்.

  ஜம்மு காஷ்மீரில் இ - ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் முதல் பெண் - குவியும் பாராட்டு

   எளிமையாக சொல்வதென்றால் கேமரா ப்ளாஷுக்கு பிறகு நாம் பார்வையில் ஒருவித அசௌகரியத்தை உணர்வோம் இல்லையா.! எங்கு பார்த்தாலும் ஒருவித ஃப்ளோட்டிங் ஸ்பாட் தெரிந்து நமக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துமே.. அது போன்றதொரு சிக்கலை ஆப்ரேஷனின் போது எதிர்கொள்வதை தவிர்க்கவே பச்சை அல்லது நீல நிற உடைகளை சீனியர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணிய தொடங்கினார்கள் மற்றும் அறுவை சிகிச்சையில் ஈடுபடும் பிற மருத்துவர்கள் மற்றும் உதவி செய்யும் ஊழியர்களும் அணிய தொடங்கினார்கள்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Trending News