Home /News /trend /

அது ஏன் எல்லா விமானமும் வெள்ளை நிறத்தில் இருக்கு தெரியுமா.? விடை தெரிந்தால் நீங்கள் ஜீனியஸ்

அது ஏன் எல்லா விமானமும் வெள்ளை நிறத்தில் இருக்கு தெரியுமா.? விடை தெரிந்தால் நீங்கள் ஜீனியஸ்

விமானம்

விமானம்

Airplane | வானத்தில் பறக்கும் விமானத்தை பலமுறை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுமட்டுமல்ல, பலமுறை நீங்களும் அதில் பயணம் செய்திருப்பீர்கள்.

நாம்  வாழ்க்கையில் பல விஷயங்களைத் தன் கண் முன்னே தினமும் பார்க்கிறோம். ஆனால், கண்கள் இவற்றைப் பார்த்து பழகிவிட்டதால், நம் மனம் அதைப் பற்றி வேறு எந்தக் கேள்வியும் எழுப்பாது என்றே கூறலாம். ஆனால் நம் மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், சாதாரணமாகத் தோற்றமளிக்கும் விஷயங்கள் கூட உங்களை பலமுறை ஆச்சரியப்படுத்தும். பல கேள்விகளை நம்முல் எழுப்பும். இப்போது விமானத்தைப் பாருங்கள். இது காற்றில் பறக்கக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது. சொல்லப்போனால், விமானத்தில் பல சிறிய மற்றும் பெரிய விஷயங்கள் ஆச்சரியமளிக்க்கும் விதத்தில் உள்ளன. ஆனால் அவை வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்னவென்று யாருக்கேனும் தெரியுமா.?

உங்கள் வாழ்நாளில் விமானத்தை பலமுறை பார்த்திருப்பீர்கள். ஏன் நீங்களும் அதில் அமர்ந்து பலமுறை பயணம் செய்திருக்க கூட நேர்ந்திருக்கும். ஆனால் எல்லா விமானமும் ஏன் வெள்ளையாக இருக்கிறது என்ற கேள்வியை நீங்கள் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டீர்கள்.? விமானங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான ஹெலிகாப்டர்களும் வெள்ளை நிறத்தில் தான் நாம் பார்த்திருக்கிறோம். வானில் பறக்கும் இந்த விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல. இதற்குப் பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு காரணம் இருக்கிறது. அதற்கான சிறப்புக் காரணத்தை இங்கே காணலாம்.

விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம்:

விமானத்தை வெண்மையாக வைத்திருப்பதற்கான காரணம் மிகவும் தர்க்கரீதியானது ஆகும். வெள்ளை நிறம் மற்ற நிறங்களை விட குறைவான வெப்பத்தை உள் வாங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நிறம் விமானத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இந்த வெள்ளை நிறமானது காற்றில் பறக்கும் எரிபொருளின் வெப்பத்தால் ஏற்படும் விபத்துகளின் வாய்ப்பைக் குறைக்கிறது. இது தவிர, வெள்ளை நிறம் விமானத்தை பல வகையான விபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் எரிப்பொருள் கசிவு ஏற்பட்டால் அது இயந்திரக் குழுவிற்கு மிக விரைவாக தெரிந்துவிடும். எனவே உடனடியாக சீரமைக்கப்பட்டு விபத்துகள் தவர்க்கப்படுகிறது.



 

வெள்ளை நிற விமானங்கள் பணத்தை சேமிக்கின்றனர்:

விமானத்தின் வெள்ளை நிறத்தால் விமான தயாரிப்பாளர்களும் பயனடைகிறார்கள் என்றே கூறலாம். வெள்ளை நிறமானது வெயிலில் சீக்கிரம் மங்காத தன்மை கொண்டது. எனவே விமானத்தின் நிறமும் மங்காது. மற்ற நிறங்கள் என்றால் சூரியனுக்கு அருகில் வானத்தில் விமானங்கள் பறப்பதால் விரைவாக நிறம் மங்கிவிடும் வாய்ப்பு உள்ளது, அதனால் விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வர்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

நிறுவனத்திற்கு ஒரு முறை விமானத்தை வண்ணமயமாக்குவதற்கு சுமார் மூன்று லட்சம் செலவாகும் என்றே சொல்லலாம். அத்தகைய சூழ்நிலையில், வெள்ளை நிறத்தால், நிறுவனங்கள் பணத்தை செலவழிப்பதில் இருந்து தப்பித்துவிடுகின்றனர். இது தவிர, வெள்ளை நிறம் காரணமாக, விமானம் விற்கப்படும் போது, ​​அதன் பெயரை எளிதாக மாற்றவும் முடியும். இதன்காரணமாக தான் விமானத்தின் நிறம் மிகவும் கவனமாக வெண்மையாக வைக்கப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Flight, Plane, Trending

அடுத்த செய்தி