Home /News /trend /

இந்த Bubble Wrap உடைத்து விளையாடுவதற்கு அல்ல... உண்மையில் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

இந்த Bubble Wrap உடைத்து விளையாடுவதற்கு அல்ல... உண்மையில் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

பேக்கிங் பொருட்கள் சேதமாகாமல் இருக்க பயன்படுத்தப்படும் குமிழி உறை

பேக்கிங் பொருட்கள் சேதமாகாமல் இருக்க பயன்படுத்தப்படும் குமிழி உறை

Intresting Facts | குழந்தைகளும் பெரியவர்களும் ஒரே மாதிரியாக ரசிக்கும் பொருட்கள் கொஞ்சமே. அதில் முக்கியமான ஒன்று என்றால் அது பாப்பிங் பபுள் ராப் (Bubble wrap).

    நாம் எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்ற பெரிய பொருட்களை வாங்கும் போது அல்லது உடையாமல் பாதுகாப்பாக எடுத்து வர வேண்டிய சிறியது முதல் பெரிய பொருட்களுக்கு பேக்கிங்கில் பாதுகாப்பாக பபுள் பபுளாய் இருக்கும் இல்லையா.? பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அதை உடைத்து விளையாடுவோமே.. அது தான் Bubble wrap.

    ஒரு உடைய கூடிய பொருளை வீட்டிற்கு கொண்டு வரும் போதெல்லாம், அது Bubble wrap-ஆல் மூடப்பட்டிருப்பதை காணலாம். அட்டைப் பெட்டிகளுக்கு அடுத்தபடியாக Bubble wrap என்பது இன்று மிகவும் பிரபலமான பேக்கேஜிங் பொருளாக இருந்து வருகிறது. ஆனால் இந்த Bubble wrap உண்மையாகவே பேக்கேஜிங்கிற்காகவே கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா.? சரி இப்போது Bubble wrap-ன் வரலாற்றை பார்ப்போம்...

    குமிழி உறை அதாவது Bubble wrap கடந்த 1957-ல் ஆல்ஃபிரட் ஃபீல்டிங் மற்றும் மார்க் சாவான்னெஸ் என்ற 2 பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் இதை பேக்கேஜிங் அல்லது ஷிப்பிங்கிற்கான ஒரு பொருளாக கண்டுபிடிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் குமிழி உறையை பாரம்பரிய வால்பேப்பரை விட ஒரு தடிமனான மற்றும் கடினமான வால்பேப்பராக கண்டுபிடித்தனர். குமிழி உறையின் ஒரிஜினல் வெர்ஷனை ஃபீல்டிங் மற்றும் சாவன்னெஸ் இருவரும் ஷவர் கர்டெயின்ஸை பயன்படுத்தி இடையில் காற்று குமிழ்கள் (air bubbles) மூலம் அவற்றை அடைத்தனர்.

    Read More : 25 விநாடிகள் தான் டைம்; இந்த படத்தில் மறைந்திருக்கும் 2-வது விலங்கை கண்டுபிடிங்க பார்க்கலாம்!


    ஆனால் டெக்ஸ்ட்சர்டு வால்பேப்பராக (Textured wallpaper) விற்க கண்டுபிடிக்கப்பட்ட இந்த தயாரிப்பு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து Bubble Wrap-ஐ பேக்கேஜிங் பொருளாகப் பயன்படுத்துவதற்கான யோசனை 1959-ஆம் ஆண்டில் IBM புதிய கம்ப்யூட்டரை அறிவித்த போது ஏற்பட்டது. தங்களதுவால்பேப்பர் முயற்சி தோல்வியுற்றதால் இரு பொறியாளர்களும் Bubble wrap-ன் பாதுகாப்பு அம்சத்தை IBM கம்ப்யூட்டர்ஸுக்கு விற்றனர்.

    இதனை தொடர்ந்து பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான IBM தங்கள் 1401 கம்ப்யூட்டர்ஸை ஏற்றுமதி செய்யும் போது அவற்றை பாதுகாப்பாக வைக்க Bubble Wrap-ஐ பயன்படுத்தத் தொடங்கியது. அப்போதிருந்து Bubble Wrap தொடர்ந்து வளர்ந்து ஷிப்பிங் துறையில் ஒரு அடிப்படை கருவியாக இன்று மாறி இருக்கிறது. அட்டைப் பெட்டிகள் மற்றும் ஸ்டைரோஃபோம் போன்றே Bubble Wrap-ம் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது. Bubble Wrap இப்போது பலவிதமான ஸ்டைல்கள் மற்றும் டிசைன்களில் வருகிறது. மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் சீல்டு ஏர் (அதன் உற்பத்தியாளர் மற்றும் ட்ரேட் ஹோல்டர்) நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதித்து கொடுக்கிறது. வால்பேப்பராக தொடங்கப்பட்ட ஒன்று மோசமான வீழ்ச்சிக்கு செல்லாமல் சர்வதேச அளவில் பேக்கேஜிங்கில் முக்கிய பொருளாக திகழ்வது உண்மையில் நம்மை வியக்க வைக்கிறது அல்லவா..!
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி