ட்விட்டரில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வைரலாவது உண்டு. வீடியோக்கள், போட்டோக்கள், கருத்து பகிர்வுகள் என ட்விட்டரில் திடீரென வைரலாகும் அனைத்து விஷயங்களுக்குப் பின்னாலும் ஒரு ஸ்டோரி இருக்கும். இப்போது திடீரென ட்விட்டரில் ஒரு ரொட்டி தயாரிக்கும் ரோபோ போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது.
வட இந்தியாவில் பிரபலமான மற்றும் பிரதான உணவாக உள்ள ரொட்டி கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே உடல் எடையை சீராக பராமரிக்க உதவும் என்பதால் இந்தியாவில் உள்ள தென்னிந்திய மக்களும் அதனை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ரொட்டி, சப்பாத்தி, புல்கா ஆகியவற்றை சாப்பிடுவது சுலபம், ஆனால் தயாரிப்பது மிகவும் கஷ்டமான வேலை. சரியான அளவு மாவிற்கு, சரியான அளவு தண்ணீர் ஊற்றி, மணிக்கணக்கில் மிசைந்து, மிருதுவான மாவை தயார் செய்ய வேண்டும். அதன் பின்னர் வட்ட வடிவில் ரொட்டியாக தேய்த்து தவாவில் சுட்டு எடுக்க வேண்டும். இது அதிக வேலையும், நேரமும் பிடிக்க கூடியது.
இப்படி கஷ்டப்பட்டு ரொட்டி சுடுவதற்கு பதிலாக, ஒரு ரோபோ கண்டுபிடிச்சால் நல்லா இருக்கும் என ஏதோ ஒரு விஞ்ஞானி சிந்தித்துள்ளார். அதன் விளைவாக ரொட்டி தயாரிக்கும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி மணிக்கணக்கில் சமையல் அறையில் நின்று ரொட்டி சுட வேண்டியது இல்லை, சுவிட்சை தட்டினாலே வட்ட, வட்ட ரொட்டி சுடச்சுட கிடைக்கும். இதுதொடர்பான போட்டோக்கள் தான் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் ஆகி வருகிறது.
also read : இந்த படத்தில் என்ன தெரிகிறது? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை நொடியில் கண்டுபிடித்துவிடலாம்...
ரொட்டிமேட்டிக் (Rotimatic) என்ற தானியங்கி ரோபோ இயந்திரம் உலகிலேயே முதன் முறையாக ரொட்டி தயாரிப்பதற்கான முழு தீர்வையும் வழங்குகிறது. மாவை போட்டதும், தானாகவே அளவிடுகிறது, தண்ணீருடன் சேர்த்து கலக்கி மாவு பிசைகிறது. அதனை வட்ட வடிவில் தேய்த்து, புசுபுசு ரொட்டியாக கொடுக்கிறது. Rotimatic clamis என்ற இணையதளத்தில் வைஃபையுடன் இணைக்கப்பட்டவுடன், ரொட்டிமேட்டிக்குக்கள் நீங்கள் பொருட்களை சேர்த்தால் மட்டும் போது அது ரொட்டியை தயார் செய்து கொடுத்துவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஹா... நமக்கு வேலையே இல்ல... வாங்குடா ஒரு ரொட்டிமேட்டிக் ரோபோவை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு முன் இதன் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க மதிப்பில் 999 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,11,000 ஆகும். இதன் விலையைக் கேட்ட நபர் ஒருவர், “இந்த விலை கொடுத்து வாங்குவதற்கு நாமே ரொட்டி தயாரிக்க கற்றுக்கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபரோ “மனைவியின் நகைகளை விற்றாவது இந்த ரொட்டி தயாரிக்கும் ரோபோவை வாங்கிவிட வேண்டும்” என கமெண்ட் செய்துள்ளார். “கடைசியாக ரொட்டி தயாரிக்கும் இயந்திரமும் இந்தியாவிற்கு வந்துவிட்டது விலை தான் ரூ.1,11,000 என மூன்றாவது நபர் வாயை பிளந்துள்ளார். இதுபோல் பல வேடிக்கையான கமெண்ட்கள் ட்விட்டர் தளத்தில் குவிந்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.